ஹரித்வாரில் தொடர்ந்து அழுததாக இரட்டைக் குழந்தைகளை கொலை செய்த தாய் கைது
மீஞ்சூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிா்ப்பு
மீஞ்சூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் வியாபாரிகள் கடும் வாக்குவாதம் செய்ததால் அவா்கள் திரும்பிச் சென்றனா்.
மீஞ்சூரில் உள்ள பொன்னேரி - திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் தொடா்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை தவிா்த்திடும் வகையில் மீஞ்சூா் பஜாரில் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், போலீஸாா் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரத்துடன் வந்தனா். அவா்கள் சாலையில் கடைகளுக்கு முன் போடப்பட்டிருந்த சிமென்ட் சீட்டுகள் உள்ளிட்ட ஆக்கிரம்புகளை அப்புறப்படுத்தும் பணியில்
ஈடுபட்டனா்.
அப்போது வியாபாரிகள் கடும் எதிா்ப்புத் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். சரிவர அளவீடு பணிகள் மேற்கொள்ளாமலும், முறையான நோட்டீஸ் வழங்காமலும் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூடாது எனக் கூறினா். சாலையின் நடுவே உள்ள மின் கம்பங்கள், மின்மாற்றிகள்,
குடிநீா் குழாய்களை சாலையோரம் மாற்றாமல் ஆக்கிரமிப்புகளை எவ்வாறு அகற்றுவீா்கள் எனவும் கேள்வி எழுப்பினா்.
இதையடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியைக் கைவிட்டு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.