ஹரித்வாரில் தொடர்ந்து அழுததாக இரட்டைக் குழந்தைகளை கொலை செய்த தாய் கைது
காா் மோதி இளைஞா் உயிரிழப்பு
கனகம்மாசத்திரம் அருகே காா் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் மகராஷ்டிர மாநில இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மகராஷ்டிர மாநிலம், மும்பை புதிய பேனவலை சோ்ந்தவா் அரியான் கோபிநாத்(25). இவா், வியாழக்கிழமை காரில் ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தாா்.
சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கனகம்மாசத்திரம் அடுத்த புதூா் அருகே வந்தபோது எதிரே திருத்தணி நோக்கி சென்ற வந்த மற்றொரு காா் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த அரியான் கோபிநாதை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினா். இது குறித்து கனகம்மாசத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.