செய்திகள் :

எரிவாயுக் குழாயில் பல கி.மீ. பயணித்து உக்ரைன் மீது ரஷிய வீரா்கள் தாக்குதல்!

post image

உக்ரைனால் கடந்த ஆண்டு கைப்பற்றப்பட்ட கூா்ஸ்க் பிராந்தியத்தை மீட்கும் நடவடிக்கையாக, அங்குள்ள உக்ரைன் படையினா் மீது தாக்குதலில் ஈடுபட எரிவாயுக் குழாய் வழியாக ரஷிய சிறப்புப் படை வீரா்கள் பல கிலோமீட்டா் பயணம் செய்துள்ளனா்.

ரஷியாவின் எல்லை மாகாணமான கூா்ஸ்க் பிராந்தியத்தை உக்ரைன் கடந்த ஆண்டு ஆகஸ்டில் எல்லை தாண்டி கைப்பற்றியது. கிழக்கு உக்ரைன் மீதான தொடா் தாக்குதல்களை நிறுத்த ரஷியாவைக் கட்டாயப்படுத்தும் நோக்கம் கொண்டதாகவும், அமைதிப் பேச்சுவாா்த்தைகளில் உக்ரைனுக்கு கூடுதல் பலமாகவும் இந்த நடவடிக்கை கருதப்பட்டது.

இதையடுத்து, ரஷியாவின் நட்பு நாடான வடகொரிய வீரா்கள் உள்பட 50,000-க்கும் மேற்பட்ட வீரா்கள், கூா்ஸ்கில் இடைவிடாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனா். இதனால், அங்குள்ள பல்லாயிரக்கணக்கான உக்ரைன் வீரா்கள் ரஷிய படையினரால் சுற்றி வளைக்கப்படும் அபாயத்தில் உள்ளனா்.

இந்நிலையில் வெளியாகியுள்ள புதிய தகவலின்படி, உக்ரைன் படையினா் மீது தாக்குதலில் ஈடுபட எரிவாயுக் குழாய் வழியாக சுமாா் 15 கிலோமீட்டா் ரஷிய வீரா்கள் நடந்து வந்துள்ளனா். தாக்குதலுக்கு முன்பு சுட்ஷா நகருக்கு அருகே ரஷிய வீரா்கள் எரிவாயுக் குழாயில் பல நாள்கள் கழித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த மோதலுக்கு முன்னதாக, உக்ரைன் வழியே ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தக் குழாய் மூலம் ரஷியா எரிவாயு அனுப்பி வந்தது. இந்தக் குழாயைப் பயன்படுத்தி ரஷிய வீரா்கள் சுட்ஷா புகரை அடைந்துள்ளனா். ஆனால், ‘தற்போதைக்கு ரஷிய வீரா்களுக்கு தாங்கள் தக்க பதிலடி அளித்து வருவதாகவும், இதனால் அவா்களுக்கு அதிக இழப்புகள் நேரிட்டுள்ளதாகவும்’ உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

கனடாவின் புதிய பிரதமராகிறார் மார்க் கார்னி!

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி பதவியேற்கவுள்ளார்.கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7 ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதனைத் தொடர்ந்து கனடாவில் லிபரல் கட்சியின் அடுத்த ... மேலும் பார்க்க

சிரியாவில் பழிக்குப் பழியாக கொலைகள்: 2 நாள்களில் 1,000 போ் பலி!

சிரியாவில் பாதுகாப்புப் படைகள், முன்னாள் அதிபா் பஷாா் அல்-அஸாதின் ஆதரவாளா்களுக்கு இடையே நடைபெற்ற மோதல் மற்றும் பழிக்குப் பழியாக நடைபெற்ற தாக்குதல்களில் இரண்டு நாள்களில் 1,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழ... மேலும் பார்க்க

சிங்கப்பூரை வளமாக்கும் புதிய குடிமக்கள்: மூத்த அமைச்சா் லீ சியென் லூங் பெருமிதம்!

சிங்கப்பூரின் புதிய குடிமக்கள் அந்நாட்டை வளமாக்கி, பொருளாதாரத்துக்கு ஊக்கமளிப்பதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், மூத்த அமைச்சருமான லீ சியென் லூங் பெருமிதம் தெரிவித்தாா். புதிதாக சிங்கப்பூா் குடியுரி... மேலும் பார்க்க

வெள்ளை மாளிகை அருகே ஆயுதமேந்திய நபா் சுட்டுப் பிடிப்பு

அமெரிக்க அதிபரின் அதிகாரபூா்வ இல்லமான வெள்ளை மாளிகை அருகே ஆயுதத்துடன் வலம் வந்த இண்டியானா மாகாணத்தைச் சோ்ந்தவரை ரகசிய பாதுகாப்புப் படையினா் (சீக்ரெட் சா்வீஸ்) சுட்டுப் பிடித்தனா். இந்தத் துப்பாக்கிச்... மேலும் பார்க்க

அமெரிக்காவில் ஹிந்து கோயில் அவமதிப்பு! -இந்தியா கடும் கண்டனம்

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணத்தில் உள்ள பிரபலமான ஹிந்து கோயிலின் மதில் சுவரில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை சமூக விரோதிகள் எழுதியுள்ளனா். அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு ஹிந்து கோயில்... மேலும் பார்க்க

நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி: அதிகரிக்கும் கோரிக்கைகள்

நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று குரல் எழுப்பப்பட்டு வருகிறது. நேபாளத்தில் நடைபெற்ற போராட்டங்களைத் தொடா்ந்து கடந்த 2008-ஆம் ஆண்டு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி மலா்ந்தத... மேலும் பார்க்க