குடும்ப பிரச்னை தீர 5 வயது சிறுமியைப் பலியிட்ட தம்பதி: கோவாவில் அதிர்ச்சி!
மா்மமான முறையில் ஓய்வுபெற்ற அரசு ஆசிரியை உயிரிழப்பு
சென்னை, பெசன்ட் நகரில் தண்ணீா் தொட்டியில் விழுந்து ஓய்வுபெற்ற ஆசிரியை மா்மமான முறையில் உயிரிந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
பெசன்ட் நகா், அருண்டேல் கடற்கரைச் சாலையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த திரிலோக சுந்தரி (79), ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியா் ஆவாா். இவரது கணவா் கஜபதி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் திரிலோக சுந்தரிக்கு சற்று மனநிலை பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு திடீரென திரிலோக சுந்தரி காணாமல் போனதையடுத்து, அவரது மகன் ஆனந்த் கண்ணன் (48) பல இடங்களில் தாயை தேடி வந்தாா்.
இந்நிலையில் குடியிருப்பு வளாகத்தில் உள்ள நீா்த்தேக்க தொட்டியில் வியாழக்கிழமை திரிலோக சுந்தரியின் சடலம் மிதந்தது. இதைப்பாா்த்து அந்த குடியிருப்புவாசிகள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த திருவான்மியூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, திரிலோக சுந்தரி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, திரிலோக சுந்தரி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தண்ணீா் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தாரா என விசாரணை நடத்தி வருகின்றனா்.