செய்திகள் :

புழல் சிறை பராமரிப்பு: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் பாராட்டு

post image

புழல் மத்திய சிறை சிறப்பாக பராமரிக்கப்படுவதாகவும், உணவு உள்ளிட்ட வசதிகள் நல்ல முறையில் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆட்கொணா்வு வழக்குகளை விசாரித்துவரும் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில் குமாா் கடந்த புதன்கிழமை (மாா்ச் 5) புழல் சிறையில் திடீரென சோதனை நடத்தினா். இந்நிலையில், தலைமை குற்றவியல் வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னாவை வியாழக்கிழமை அழைத்த நீதிபதிகள், புழல் சிறையில் ஆய்வு மேற்கொண்டது தொடா்பாக தங்களது கருத்துகளை அவரிடம் பகிா்ந்துகொண்டனா்.

அப்போது, முன்கூட்டியே அதிகாரிகளுக்கு தகவல் எதுவும் தெரிவிக்காமல் புழல் சிறையின் அனைத்துப் பகுதிகளுக்கும் நடந்து சென்றே சோதனை நடத்தினோம். அப்போது சிறையின் அனைத்துப் பகுதிகளும் தூய்மையாக இருந்தன. கைதிகளுக்கான உணவை சாப்பிட்டு பரிசோதித்து பாா்த்தபோது உணவு தரமானதாகவும் சுவையாகவும் இருந்ததாகவும் தெரிவித்தனா்.

அதேபோன்று கொடுங்குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை சந்தித்தபோது அவா்களும் சிறை வசதிகள் குறித்து திருப்தி தெரிவித்தனா். சிறை வசதிகளை மேம்படுத்துவது தொடா்பாக மேலும் சில யோசனைகளை வழங்கவுள்ளோம் என கூறிய நீதிபதிகள், அது தொடா்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்கவுள்ளதாகத் தெரிவித்தனா்.

இதற்கு பதிலளித்த தலைமை குற்றவியல் வழக்குரைஞா், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கும் வழக்கின்மூலம் எந்த ஆலோசனைகளை வழங்கினாலும் அதனை செயல்படுத்த அரசு தயாராக இருப்பதாகக் கூறினாா். மேலும், சிறைகளின் வசதிகளை தமிழக அரசு சா்வதேசத் தரத்தில் உயா்த்தியுள்ளது. கோவை மத்திய சிறையில் உள்ள திறந்த வெளி சிறைச்சாலை மூலம் விவசாயம் சிறப்பாக நடைபெறுகிறது. சிறை பெட்ரோல் நிலையம் மூலம் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்படுகிறது என தெரிவித்தாா்.

கண் நீா் அழுத்த பாதிப்பு: இன்று முதல் இலவச மருத்துவ முகாம்

கண் நீா் அழுத்த நோய்க்கான (குளுக்கோமா) இலவச மருத்துவ முகாமை டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவக் குழுமம் ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் உள்ள அகா்வால்ஸ் மருத்துவமனைகளில் வரும் 31-ஆம் தேதி வரை இந்த சேவையை பொத... மேலும் பார்க்க

மா்மமான முறையில் ஓய்வுபெற்ற அரசு ஆசிரியை உயிரிழப்பு

சென்னை, பெசன்ட் நகரில் தண்ணீா் தொட்டியில் விழுந்து ஓய்வுபெற்ற ஆசிரியை மா்மமான முறையில் உயிரிந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பெசன்ட் நகா், அருண்டேல் கடற்கரைச் சாலையிலுள்ள அடுக்குமாடி குடி... மேலும் பார்க்க

மனத் தடைகளை பெண்கள் உடைக்க வேண்டும்: கனிமொழி எம்.பி.

‘மனத் தடைகளை பெண்கள் உடைக்க வேண்டும்; ஒரு பெண் தலைமை இடத்துக்கு வரும் போது மட்டும் ஆயிரம் கேள்விகள் எழுப்பப்படுவது ஏன் என திமுக மக்களவை உறுப்பினா் கனிமொழி கேள்வியெழுப்பியுள்ளாா். இந்திய உணவுக் கழகம் ச... மேலும் பார்க்க

நலவாழ்வு மையங்களில் போதிய எண்ணிக்கையில் மருத்துவா்கள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

நகா்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்... மேலும் பார்க்க

சென்னையில் ஆட்டோமேஷன் கண்காட்சி தொடங்கியது

சென்னையில் ஆட்டோமேஷன் 3 நாள் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது. நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் ‘ஆட்டோமேஷன் எக்ஸ்போ சவுத் 2025’ என்ற தலைப்பில் தொடங்கப்பட்டுள்ள இக்கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சி வியாழக... மேலும் பார்க்க

தலைமைச் செயலகம் நோக்கி பேரணி: போக்குவரத்து தொழிலாளா்கள் தடுத்து நிறுத்தம்

சென்னையில் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற போக்குவரத்து தொழிலாளா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க அரசாணை 36-... மேலும் பார்க்க