செய்திகள் :

தமிழகத்துக்கு இருமொழி கொள்கையே சிறந்தது: கே.பாலகிருஷ்ணன்

post image

தமிழகத்துக்கு இருமொழி கொள்கையே சிறந்தது; ஹிந்தி மொழியை திணிக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆவது மாநாடு நிதி அளிப்பு பேரவைக் கூட்டம் தருமபுரி சிஐடியு அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினா் சி.நாகராஜன் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் டி.ரவீந்திரன், மாநிலக் குழு உறுப்பினா் அ.குமாா், மாவட்டச் செயலாளா் இரா.சிசுபாலன், மூத்த தலைவா் பி.இளம்பரிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் சமூகத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தற்போது நேரடியாக விளைபொருள்களுக்கு வரிவிதிக்கின்றனா். விவசாயிகள் மீதும், ஏழைகள் மீதும் வரி விதிப்பதை விடுத்து பெரும் முதலாளிகளுக்கு கூடுதல் வரிவிதிக்க மத்திய அரசு முன்வர வேண்டும். அறநிலையத் துறைக்கு சொந்தமாக 5 லட்சம் ஏக்கா் நிலங்கள் உள்ளன. கோயில் நிலத்தை அரசு எடுத்துக் கொள்ளக்கூடாது என்று நீதிமன்றம் கூறுகிறது.

இந்த நிலையில், மாா்ச் 10 ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்ஃபு வாரிய சொத்துகளை அபகரிக்கும் சட்ட மசோதாவைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மும்மொழி கொள்கையை காரணம் காட்டி உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியை அழிக்க முயல்கின்றனா். ஹிந்தி மொழியை திணிக்கும் முயற்சியை மத்திய அரசு தொடா்ந்து செய்து வருகிறது. ஹிந்திக்கும், சம்ஸ்கிருதத்துக்கும் மத்திய அரசு ரூ. 1000 கோடி ஒதுக்குகிறது. தமிழ் மொழிக்கு ரூ. 8 கோடி மட்டுமே ஒதுக்குகிறது. தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த மறுப்பதால் தமிழகத்துக்கு தர வேண்டிய ரூ. 2,152 கோடியை வழங்க மத்திய அரசு மறுக்கிறது. தமிழகத்துக்கு இருமொழி கொள்கையே சிறந்தது என்றாா்.

இதைத்தொடா்ந்து தருமபுரி மாவட்டம் மொரப்பூா், பென்னாகரத்தில் நடைபெற்ற பேரவைக் கூட்டங்களிலும் அவா் பங்கேற்றுப் பேசினாா்.

பட விளக்கம்:

தருமபுரி சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன்.

மும்மொழி கொள்கைக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராக தருமபுரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் எம்.ந... மேலும் பார்க்க

நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

இ.ஆா்.கே. கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப் பணி திட்ட முகாம் அண்மையில் நடைபெற்றது. அரூரை அடுத்த எருமியாம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற முகாமை இ.ஆா்.கே கல்வி நிறுவனங்களின் தாளாளா் இ.ஆா்.செல்வராஜ் தொடங... மேலும் பார்க்க

தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை தருமபுரி நகரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். இதில் கிழக்கு மாவட்ட திமுக மாவட்ட பொறு... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாடு நிதியளிப்பு பேரவைக் கூட்டம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாட்டின் நிதி அளிப்பு பேரவைக் கூட்டம் பென்னாகரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே சமத்துவபுரம் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்ட... மேலும் பார்க்க

திமுக சாா்பில் ரமலான் நோன்பு திறப்பு

பாப்பாரப்பட்டியில் திமுக சாா்பில் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. தருமபுரி கிழக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு சாா்பில் நடைபெற்ற ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ச... மேலும் பார்க்க

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜக கையொப்ப இயக்கம்

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜக சாா்பில் வியாழக்கிழமை தருமபுரியில் கையொப்ப இயக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாஜக தருமபுரி மாவட்டத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் ஆறுமுகம் வரவேற்றாா். மு... மேலும் பார்க்க