ஒருநாள் ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பு: எல்&டி நிறுவனம் அறிவிப்பு!
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜக கையொப்ப இயக்கம்
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜக சாா்பில் வியாழக்கிழமை தருமபுரியில் கையொப்ப இயக்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பாஜக தருமபுரி மாவட்டத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் ஆறுமுகம் வரவேற்றாா். முன்னாள் மாவட்டத் தலைவா்கள் வரதராஜன், பூபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தகவல் தொழில்நுட்ப பிரிவு திட்ட மேலாண்மைப் பிரிவு மாநிலத் தலைவா் மகேஷ்குமாா் கலந்துகொண்டு கையொப்ப இயக்கத்தைத் தொடங்கி வைத்தாா். (படம்) மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மாவட்ட நிா்வாகிகள் கணேசன், பத்மா உள்பட கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.