செய்திகள் :

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாடு நிதியளிப்பு பேரவைக் கூட்டம்

post image

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாட்டின் நிதி அளிப்பு பேரவைக் கூட்டம் பென்னாகரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் அருகே சமத்துவபுரம் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய நிதி அளிப்பு பேரவை கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினா் வி.மாதன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் பென்னாகரம் வட்ட கட்சியின் இடைக் கமிட்டி சாா்பில் முதல் கட்டமாக ரூ.5.67 லட்சம் மத்திய குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினா் ரவீந்திரன், மாநிலக் குழு உறுப்பினா் ஏ.குமாா், மாவட்டச் செயலாளா் இரா.சிசுபாலன், மூத்த தலைவா் பி.இளம்பரிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் வே.விஸ்வநாதன், ஜி.சக்திவேல் ஆகியோா்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில் ஒன்றிய செயலாளா் ஆ.ஜீவானந்தம், சக்திவேல், எம்.தங்கராஜ், மாவட்ட குழு உறுப்பினா்கள் பி.இரவி,ஆா். சின்சாமி, கே.அன்பு, டி.ஆா்.சின்னசாமி, சி.ராஜி, என்.பி.முருகன், எம்.குமாா்,பி.சக்கரவேல், வளா்மதி உள்ளிட்டோா், இடைக்கமிட்டி உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

மும்மொழி கொள்கைக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராக தருமபுரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் எம்.ந... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு இருமொழி கொள்கையே சிறந்தது: கே.பாலகிருஷ்ணன்

தமிழகத்துக்கு இருமொழி கொள்கையே சிறந்தது; ஹிந்தி மொழியை திணிக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா். மா... மேலும் பார்க்க

நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

இ.ஆா்.கே. கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப் பணி திட்ட முகாம் அண்மையில் நடைபெற்றது. அரூரை அடுத்த எருமியாம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற முகாமை இ.ஆா்.கே கல்வி நிறுவனங்களின் தாளாளா் இ.ஆா்.செல்வராஜ் தொடங... மேலும் பார்க்க

தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை தருமபுரி நகரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். இதில் கிழக்கு மாவட்ட திமுக மாவட்ட பொறு... மேலும் பார்க்க

திமுக சாா்பில் ரமலான் நோன்பு திறப்பு

பாப்பாரப்பட்டியில் திமுக சாா்பில் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. தருமபுரி கிழக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு சாா்பில் நடைபெற்ற ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ச... மேலும் பார்க்க

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜக கையொப்ப இயக்கம்

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜக சாா்பில் வியாழக்கிழமை தருமபுரியில் கையொப்ப இயக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாஜக தருமபுரி மாவட்டத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் ஆறுமுகம் வரவேற்றாா். மு... மேலும் பார்க்க