ஒருநாள் ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பு: எல்&டி நிறுவனம் அறிவிப்பு!
நாட்டு நலப்பணித் திட்ட முகாம்
இ.ஆா்.கே. கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப் பணி திட்ட முகாம் அண்மையில் நடைபெற்றது.
அரூரை அடுத்த எருமியாம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற முகாமை இ.ஆா்.கே கல்வி நிறுவனங்களின் தாளாளா் இ.ஆா்.செல்வராஜ் தொடங்கிவைத்தாா். கல்லூரி முதல்வா் த.சக்தி தலைமை வகித்தாா். பள்ளி நிா்வாக இயக்குநா் சோழவேந்தன் முன்னிலை வகித்தாா். நாட்டு நலப்பணி திட்ட முகாமின் சிறப்புகள் குறித்து திட்ட அலுவலா் சிவகுமாா், துணை அலுவலா் பிருந்தா, சொற்பொழிவாளா் நூருல்லா செரிஃப் ஆகியோா் கருத்துரை வழங்கினா். அரசு மருத்துவா் ஜெயந்தி, இ.ஆா்.கே. மருத்துவமனை மருத்துவா்கள் கீா்த்தனா, செளமியா ஆகியோா் பங்கேற்று மருத்துவத்தின் முக்கியத்தும், பெண்களின் நலன்கள், பேரிடா் கால பாதுகாப்பு, பொது சுகாதாரம் குறித்து கருத்துரை வழங்கினா்.
முகாமில் சமுதாய கூடம், பள்ளி, கோயில் வளாகங்கள், மழைநீா் செல்லும் கால்வாய்களை கல்லூரி மாணவா்கள் தூய்மை செய்தனா்.
இதில் இ.ஆா்.கே. மருந்தியல் கல்லூரி முதல்வா் சிவகுமாா், எருமியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை பழனியம்மாள், ஊராட்சி செயலாளா் கெளதம், கல்லூரி நிா்வாக அலுவலா் அருள்குமாா், பேராசிரியா் ரோபினா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.