செய்திகள் :

D Imman: "என்னுடைய எக்ஸ் பக்கத்திலிருந்து பதிவுகள் வந்தால்..." - இமானின் X கணக்கு ஹேக் செய்யப்பட்டது

post image

இசையமைப்பாளர் டி இமானின் 'எக்ஸ்' தளம் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக இமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருந்த பதிவில், "எனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளம் (@immancomposer) ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். ஹேக்கர் எனது கணக்கு தொடர்புடைய மின்னஞ்சலையும் மாற்றி இருக்கிறார். மேலும் கடந்த 24 மணி நேரத்திற்குள் எனது எக்ஸ் பக்கத்தில் பதிவுகளையும் பதிவிட்டிருக்கிறார். எனது கணக்கை விரைவில் மீட்டுத் தருமாறு எக்ஸ் தள நிர்வாகத்திற்குக் கோரிக்கை வைத்திருக்கிறேன்.

இமான்

நான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இசைத்துறையில் இருப்பதால், என்னைப் பின்தொடர்பவர்களுடனான தொடர்பு எனக்கு மிகவும் முக்கியமானது. தற்போது என்னுடைய எக்ஸ் பக்கத்திலிருந்து எதாவது பதிவுகள் வந்தால் அதனை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம். எக்ஸ் நிர்வாகம் உடனடியாக என்னுடைய கணக்கை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த நேரத்தில் உங்களின் ஆதரவுக்கு நன்றி. எனது கணக்கைத் திரும்பப் பெற்றவுடன் உங்களுக்குத் தகவலைத் தெரிவிக்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Vyjayanthimala: வைஜெயந்திமாலாவுக்கு என்னாச்சு? - வைரலாகும் செய்தி உண்மையா?

1949-ம் ஆண்டு 'வாழ்க்கை' என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் வைஜயந்திமாலா. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல்வேறு மொழிப் படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர். பிமல் ராயின... மேலும் பார்க்க

Bison : மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் படத்தின் First Look வெளியானது!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் இன்று (மார்ச் 7) வெளியிடப்பட்டுள்ளது. ஸ்போர்ட்ஸ் ட்ராமா வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்த... மேலும் பார்க்க

`திரைப்படங்களில் சாதியைத் திணிப்பது தவறு...' - நடிகர் ராகவா லாரன்ஸ்

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் ராகவா லாரன்ஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டிருந்தார். அப்போது புதுக்கோட்டை மாவட்டம், குருக்களையாபட்டியைச் சேர்ந்த விஷ்ணு என்ற சிறுவன், தனது கிராமத்திற்கு குடிநீர் வ... மேலும் பார்க்க

Kingston Review: கடலில் இறங்கினால் பேய் அடித்துவிடும்! எப்படியிருக்கிறது இந்த ஹாரர் கடல் சாகசம்?

தூத்துக்குடியிலுள்ள கடற்கரை கிராமமான தூவத்தூர் மக்களின் முதன்மை வாழ்வாதாரம் மீன்பிடித்தல். அது பல ஆண்டுகளாகக் கடல் சாபத்தாலும், கடலுக்குள் செல்லும் மீனவர்கள் திரும்பி வருவதில்லை என்ற பயத்தாலும் தடைப்ப... மேலும் பார்க்க