செய்திகள் :

கோல் கீப்பிங்கில் மாஸ்டர்கிளாஸ்..! பார்சிலோனா கோல் கீப்பர் 14 போட்டிகளில் 8 கிளீன் ஷீட்!

post image

ஒரே போட்டியில் 8 கோல்களை தடுத்து அசத்தியுள்ள பார்சிலோனா வீரருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

போலந்து நாட்டைச் சேர்ந்த வோஜ்சீச் ஸ்கெஸ்னி தற்போது பார்சிலோனா அணிக்காக கோல் கீப்பராக விளையாடி வருகிறார்.

34 வயதாகும் இவர் நேற்று நடந்த பென்பிசியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் போட்டியில் 8 கோல்களை தடுத்து தனது 8ஆவது கிளீன் ஷீட்டை எடுத்துள்ளார்.

14 போட்டிகளில் இது 8ஆவது கிளீன் ஷீட் ஆகுமென்பது குறிப்பிடத்தக்கது.

கிளீன் ஷீட் என்பது எதிரணியினர் ஒரு கோல்கூட அடிக்காமல் தடுப்பதாகும்.

பார்சிலோனா அணி வீரர் குபார்சி 22ஆவது நிமிஷத்தில் ரெட் கார்டு வாங்கி வெளியேற 10 வீரர்களுடன் சிறப்பாக விளையாடியது.

ரபின்ஹா 61ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து அசத்தினார். இந்தப் போட்டியில் 1-0 என பார்சிலோனா அசத்தல் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ஸ்கெஸ்னி தடுத்த ஒவ்வொரு கோல்களையும் பலரும் வியந்து பாராட்டி வருகிறார்கள்.

இது குறித்து ஸ்கெஸ்னி, “இது எனது சிறந்த போட்டி இல்லை. இனிமேல்தான் அது வரும். கவலை வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.

ஹாட்டஸ்ட் சர்ப்ரைஸ்..! கேதிகா சர்மாவின் பாடல் விடியோ எப்போது?

ராபின்ஹூட் படத்தில் இருந்து கேதிகா சர்மாவின் பாடல் விடியோ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர் நிதின் நாயகனாகவும் ஸ்ரீ லீலா நாயகியாகவும் நடித்துள்ள ராபின்ஹூட் படத்... மேலும் பார்க்க

பச்சைப் பட்டினி விரதத்தைத் தொடங்கிய சமயபுரம் மாரியம்மன்!

திருச்சி: பக்தர்களுக்காக 28 நாள்கள் பச்சைப் பட்டினி விரதத்தைத் தொடங்கினார் சமயபுரம் மாரியம்மன். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது... மேலும் பார்க்க

இன்றைய தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.09-03-2025ஞாயிற்றுக்கிழமைமேஷம்:இன்று கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்... மேலும் பார்க்க

உலக ஜூனியா் செஸ்: பிரணவ் வெங்கடேஷ் சாம்பியன்

மான்டினீக்ரோவில் நடைபெற்ற உலக ஜூனியா் செஸ் சாம்பியன்ஷிப்பில் (அண்டா் 20) ஓபன் பிரிவில் இந்தியாவின் பிரணவ் வெங்கடேஷ் (18) சாம்பியன் பட்டம் வென்றாா்.மொத்தம் 11 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில், இந்திய ... மேலும் பார்க்க

ஸ்வெரெவ் அதிா்ச்சி; கிரீக்ஸ்பூா் அசத்தல்

அமெரிக்காவில் நடைபெறும் இண்டியன் வெல்ஸ் ஓபன் மாஸ்டா்ஸ் டென்னிஸில், முன்னணி வீரரான ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் 2-ஆவது சுற்றில் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ... மேலும் பார்க்க