செய்திகள் :

'மும்மொழிக் கொள்கைக்காக ரெய்டு; குழந்தைகளிடம் கையெழுத்தே வாங்கக் கூடாது' - உதயநிதி ஸ்டாலின்

post image

மும்மொழிக் கொள்கைக்காக தமிழகத்தில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசு திட்டப் பணிகள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று(மார்ச் 7) நடைபெற்றது.

அரசின் நலத் திட்டங்கள் மக்களுக்கு விரைவாக எளிதாக சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | பிரதமரின் நிகழ்ச்சிக்கு முதல்முறையாக பாதுகாப்புப் பணியில் முழுவதும் பெண்கள்!

இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய உதயநிதி,

"மும்மொழிக் கொள்கைக்காக தமிழகத்தில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது.

மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு, தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஆதரிக்க வேண்டும் என்பதற்காக அவர்களின் ஏஜெண்டான அமலாக்கத் துறையை வைத்து மத்திய பாஜக அரசு சோதனை மேற்கொள்கிறது. திசைதிருப்புவதற்கான ஒரு வழியாகவும் இது இருக்கலாம்.

இதுபோன்ற பல சோதனைகளை நாங்கள் பார்த்துவிட்டோம். சோதனை முடிந்தபிறகு உண்மை எதுவெனத் தெரியும்" என்று கூறியுள்ளார்.

மேலும் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான பாஜகவின் கையெழுத்து இயக்கம் குறித்த பதிலளித்த உதயநிதி, "முதலில் குழந்தைகளிடம் கையெழுத்தே வாங்கக் கூடாது. நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கினோம். ஆனால், பள்ளி மாணவர்களைத் தவிர்த்துதான் மற்றவர்களிடம் வாங்கினோம். ஏற்கெனவே பாஜகவினர் 'மிஸ்டு கால்' கொடுத்து ஒரு கோடி பேரைச் சேர்த்தார்கள். அதன் தொடர்ச்சியாக இதனை பார்க்கிறோம்" என்று கூறியுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை நேற்று(மார்ச் 6) சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | குழந்தை குண்டாக இருக்கிறதா? எச்சரிக்கும் மருத்துவர்கள்!

சாகித்திய அகாதெமி விருதுக்கு தேர்வான விமலாவுக்கு முதல்வர் வாழ்த்து!

சாகித்திய அகாதெமி விருதுக்கு தேர்வான விமலாவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.மலையாள மொழி சுயசரிதை புத்தகத்தை ப. விமலா தமிழில் செய்த மொழிபெயா்ப்பு உள்பட 21 மொழிபெயா்ப்பு புத்தகங்க... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் கோப்பை: மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் திரையிடல்!

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டி இன்று(மார்ச். 9) நடைபெறவுள்ள நிலையில், மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் சிறப்பு திரையிடல் செய்யப்படுகிறது.சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத... மேலும் பார்க்க

ஆளுநா் ஆா்.என்.ரவி பிகாா் பயணம்

ஆளுநா் ஆா்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக சனிக்கிழமை சொந்த மாநிலமான பிகாா் சென்றாா். ஆளுநா் ஆா்.என்.ரவி தனது சொந்த வேலை காரணமாக இண்டிகோ பயணிகள் விமானத்தில் சனிக்கிழமை நண்பகல் பிகாா் மாநிலம் பாட்னா சென்றடை... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் மாா்ச் 12-இல் திமுக கண்டன பொதுக் கூட்டம்: திருவள்ளூரில் முதல்வா் பங்கேற்கிறாா்

தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மும்மொழி கொள்கை விவகாரங்களில் மத்திய அரசை கண்டித்து திமுக சாா்பில் தமிழகம் முழுவதும் மாா்ச் 12-இல் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் விடுதலை தீா்ப்பை எதிா்த்து தாமதமின்றி மேல்முறையீடு

போக்ஸோ வழக்கின் குற்றவாளியை விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்தால், அதை எதிா்த்து தாமதமின்றி மேல்முறையீடு செய்ய காவல் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி-க்கு மாநில தலைமை குற்றவிய... மேலும் பார்க்க

ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி: காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் நடைபெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு காவல் துறையினா் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கலாம் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூா் மாவட்டம் சோனாங்குப்பத்தைச் சோ்ந்த சுரேஷ் உயா... மேலும் பார்க்க