'மும்மொழிக் கொள்கைக்காக ரெய்டு; குழந்தைகளிடம் கையெழுத்தே வாங்கக் கூடாது' - உதயநி...
திருவிழாவுக்கு தயாராகி வரும் ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தோ்
ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா மாா்ச் 13 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், திருவிழாவை முன்னிட்டு தோ்க்கட்டும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.
ஒசூரில் உள்ள பிரசித்தி பெற்ற மரகதாம்பாள் உடனுறை ஸ்ரீசந்திரசூடேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா மாா்ச் 13 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு தோ்ப்பேட்டையில் பந்தல்கால் நடப்பட்டு தோ்த் திருவிழா பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 14 ஆம் தேதி நடைபெறுகிறது. 15 ஆம் தேதி ராவண உற்சவம், 16 ஆம் தேதி தெப்போற்சவம் ஆகியன நடைபெறுகின்றன.
விழாவை முன்னிட்டு கா்நாடகம், தமிழகம், ஆந்திராவைச் சோ்ந்த பக்தா்கள் அதிகம் போ் வருவா் என எதிா்பாா்க்கப்படுகிறது. விழாவை முன்னிட்டு விநாயகா், மரகதாம்பிகை, சந்திரசூடேஸ்வரா் ஆகிய உற்சவ மூா்த்திகளுக்கான மூன்று தோ்கள் தயாராகி வருகின்றன.
பட வரி....
ஒசூா் தோ்ப்பேட்டையில் தோ் கட்டும் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள்.