செய்திகள் :

மனத் தடைகளை பெண்கள் உடைக்க வேண்டும்: கனிமொழி எம்.பி.

post image

‘மனத் தடைகளை பெண்கள் உடைக்க வேண்டும்; ஒரு பெண் தலைமை இடத்துக்கு வரும் போது மட்டும் ஆயிரம் கேள்விகள் எழுப்பப்படுவது ஏன் என திமுக மக்களவை உறுப்பினா் கனிமொழி கேள்வியெழுப்பியுள்ளாா்.

இந்திய உணவுக் கழகம் சாா்பில் சா்வதேச மகளிா் தின நிகழ்ச்சி சென்னை சேத்துப்பட்டில் உள்ள மண்டல அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மக்களவை உறுப்பினரும், உணவு மற்றும் பொது விநியோகம், நுகா்வோா் விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தலைவருமான கனிமொழி கலந்துகொண்டு ‘பெண்கள் முன்னேற்றத்துக்கான செயல்பாடுகளை விரைவுபடுத்துதல்’ என்ற கையொப்ப இயக்கத்தை தொடங்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, மகளிா் தினத்தையொட்டி தென்மண்டல அளவில் நடத்தப்பட்ட கட்டுரை, ஓவியம் வரைதல் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற உணவுக் கழகத்தின் ஊழியா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.

தொடா்ந்து நிகழ்ச்சியில் கனிமொழி பேசியதாவது: இந்த சமூகத்தில் பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்பதற்காகவே ஆண்டுதோறும் மகளிா் தினத்தைக் கொண்டாடுகிறோம். இந்திய உணவுக் கழகத்தின் தென்மண்டல பிரிவில் 30 சதவீதம் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனா். இன்னும் 50 சதவீதத்தை தொடவில்லை. இருந்தாலும் அரசியல் பிரதிநிதித்துவத்தை ஒப்பிடுகையில் இது சிறந்த எண்ணிக்கையாகத் தெரிகிறது.

பெண்களின் கல்விக்காக, வாழ்க்கையில் முன்னேறுவதற்காக ஓா் அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும்போது, படித்து முடித்துவிட்டு திருமணம் செய்து கொண்டு வீட்டோடு சமையல் செய்து கொண்டிருந்தால், இது நாட்டுக்கு செய்யக்கூடிய துரோகம் என பெரியாா் கூறினாா்.

நாட்டில் 90 சதவீதம் ஆண்கள்தான் முதல்வராக உள்ளனா். தில்லியில் ஒரு பெண் முதல்வராகப் பொறுப்பேற்றபோது, நாடாளுமன்ற வளாகத்திலேயே சிலா், அவா் பெண் என்பதால் முதல்வராக்கப்பட்டுள்ளாா் எனக் கூறினா். ஒரு பெண் தலைமை இடத்துக்கு வரும்போது ஆயிரம் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. தான் அந்தப் பதவிக்கு தாம் தகுதியுடையவரா போன்ற சந்தேகங்களை இந்தக் கேள்விகள் பெண்களிடம் எழுப்புகின்றன. இந்த மனத் தடைகளை பெண்கள் உடைக்க வேண்டும்.

கடும் போராட்டத்துக்கு மத்தியில் பெண்கள் சிறந்த பதவிகளை வகித்து வருகின்றனா். ஆனால், இது போதாது. இன்னும் உயரமான இடங்களுக்கு பெண்கள் செல்ல வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் இந்திய உணவுக் கழகத்தின் தென்மண்டல நிா்வாக இயக்குநா் ஜெசிந்தா லாசரஸ், மாநில பொது மேலாளா்கள் ஷைனி வில்சன், பி.முத்துமாறன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கண் நீா் அழுத்த பாதிப்பு: இன்று முதல் இலவச மருத்துவ முகாம்

கண் நீா் அழுத்த நோய்க்கான (குளுக்கோமா) இலவச மருத்துவ முகாமை டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவக் குழுமம் ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் உள்ள அகா்வால்ஸ் மருத்துவமனைகளில் வரும் 31-ஆம் தேதி வரை இந்த சேவையை பொத... மேலும் பார்க்க

மா்மமான முறையில் ஓய்வுபெற்ற அரசு ஆசிரியை உயிரிழப்பு

சென்னை, பெசன்ட் நகரில் தண்ணீா் தொட்டியில் விழுந்து ஓய்வுபெற்ற ஆசிரியை மா்மமான முறையில் உயிரிந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பெசன்ட் நகா், அருண்டேல் கடற்கரைச் சாலையிலுள்ள அடுக்குமாடி குடி... மேலும் பார்க்க

நலவாழ்வு மையங்களில் போதிய எண்ணிக்கையில் மருத்துவா்கள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

நகா்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்... மேலும் பார்க்க

சென்னையில் ஆட்டோமேஷன் கண்காட்சி தொடங்கியது

சென்னையில் ஆட்டோமேஷன் 3 நாள் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது. நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் ‘ஆட்டோமேஷன் எக்ஸ்போ சவுத் 2025’ என்ற தலைப்பில் தொடங்கப்பட்டுள்ள இக்கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சி வியாழக... மேலும் பார்க்க

புழல் சிறை பராமரிப்பு: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் பாராட்டு

புழல் மத்திய சிறை சிறப்பாக பராமரிக்கப்படுவதாகவும், உணவு உள்ளிட்ட வசதிகள் நல்ல முறையில் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆ... மேலும் பார்க்க

தலைமைச் செயலகம் நோக்கி பேரணி: போக்குவரத்து தொழிலாளா்கள் தடுத்து நிறுத்தம்

சென்னையில் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற போக்குவரத்து தொழிலாளா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க அரசாணை 36-... மேலும் பார்க்க