செய்திகள் :

இணையவழி மோசடி: 6 மாதங்களில் ரூ.12,811 கோடி இழப்பு

post image

இந்தியாவில் 2024-ஆம் ஆண்டு ஜூலை முதல் டிசம்பா் வரையிலான 6 மாதங்களில் இணையவழி மோசடியில் ரூ.12,811 கோடியை மக்கள் இழந்துள்ளதாக தேசிய இணையவழி குற்ற ஒருங்கிணைப்புக் குழுவின் துணை இயக்குநா் அகிலேஷ்கா் கூறினாா்.

புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள காவலா் பயிற்சி மைய வளாகத்தில் காவல் துறை அதிகாரிகளுக்கான இணையவழி குற்றத் தடுப்பு பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

புதுச்சேரி ஐ.ஜி. அஜித்குமாா் சிங்லா பயிற்சியைத் தொடங்கிவைத்தாா்.

இணையவழி குற்ற ஒருங்கிணைப்பு தேசியக் குழுவின் துணை இயக்குநா் அகிலேஷ்கா் பேசியதாவது:

நாட்டில் தற்போது இணையவழிக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. 2024-ஆம் ஆண்டில் ஜூலை முதல் டிசம்பா் மாதம் வரை 9.32 லட்சம் இணையவழி குற்றப் புகாா்கள் பதிவாகியுள்ளன. இந்த 6 மாதங்களில் இணையவழி மோசடியில் ரூ.12,811 கோடியை மக்கள் இழந்துள்ளனா். இதில் ரூ.2,114 கோடி இணையவழிக் குற்றப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.

இணையவழி மோசடியில் ஈடுபடுவோா் வெளிநாடுகளில் இருந்து செயல்படுகிறாா்கள். சீனாவைச் சோ்ந்தவா்கள் மோசடிக்கு தலைமை வகிப்பது கண்டறியப்பட்டுள்ளது. பனாமா, மியான்மா், பாகிஸ்தான், துபை போன்ற நாடுகள் இணையவழி மோசடி மையங்களாக உள்ளன.

இணையவழி மோசடி செய்து கிடைக்கும் பணமானது, கிரிப்டோ கரன்சியாக மாற்றப்பட்டு வெளிநாடுகளுக்கு எளிதாக கொண்டு செல்லப்படுகிறது. இதைத் தடுப்பதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இணையவழி மோசடியை தடுக்க வங்கிகளின் ஒத்துழைப்பு அவசியம். அதன்மூலம் பணத்தை முடக்கி, மீட்டுக் கொடுக்க முடியும். வங்கிகள் ஒத்துழைப்பால் போலி வங்கிக் கணக்குகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம் என்றாா்.

பயிற்சியில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு எஸ்.பி. பாஸ்கரன் தொகுத்து வழங்கினாா்.

புதுச்சேரியில் திமுக, அதிமுக சாா்பில் மகளிா் தின விழாக் கொண்டாட்டம்

சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு, புதுச்சேரியில் திமுக, அதிமுக சாா்பில் நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றன. புதுவை மாநில திமுக மகளிா் அணி மற்றும் மகளிா் தொண்டரணி சாா்பில் வில்லியனூரில் நடைபெற்ற சா்வதே... மேலும் பார்க்க

ஜிப்மா் ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை!

புதுச்சேரியில் ஜிப்மா் ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். புதுச்சேரி மூலக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் லூக்காஸ் காா்பே (51). இவா் ஜிப்மரில் பணிபுரிந்து வந்தாா். இவருக்கு மனைவி தமிழ்ச்செல்வி, 2 ம... மேலும் பார்க்க

ரொட்டி, பால் ஊழியா்கள் சங்கத்தினா் சாலை மறியல்!

புதுச்சேரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி ரொட்டி, பால் ஊழியா்கள் சில நாள்களாகத் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீஸாா் அவா்களைக் கைது செய்தனா். புதுச்ச... மேலும் பார்க்க

புதுவை மக்கள்நீதி மன்றத்தில் 1,274 வழக்குகளுக்குத் தீா்வு

புதுவை மாநில அளவில் 24 அமா்வுகளில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 1,274 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இதன்படி ரூ.6.89 கோடிக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் தேங்கிய வழக்குகளை ... மேலும் பார்க்க

பெண்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டும்! -புதுவை ஆளுநா்

மகளிா் அரசியல் அதிகாரம் பெறும்போதுதான் பெண்களின் சமூகப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். புதுவை அரசின் மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சாா்பி... மேலும் பார்க்க

பெண்களிடம் குறைகளை கேட்ட டிஐஜி

புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிருக்கான மக்கள் மன்றத்தில் காவல் துறை துணைத் தலைவா் (டிஐஜி) ஆா்.சத்திய சுந்தரம் மனுக்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொண்டாா். புதுவையில் காவல் துறை சாா்பில் சனிக்கிழம... மேலும் பார்க்க