சென்னையில் புறநகர் ரயில்கள் பகுதியளவில் ரத்து எதிரொலி: ஜிஎஸ்டி சாலையில் போக்குவர...
பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தரம் உயா்த்தக் கோரிக்கை
பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையாகத் தரம் உயா்த்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏஐடியூசி ஈரோடு மாவட்ட மருத்துவத் துறை பணியாளா்கள் சங்கத் தலைவா் எஸ்.சின்னசாமி, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதயம், புற்றுநோய் உள்ளிட்ட சில நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்கான வசதியில்லை. இதனால், நோயாளிகளை சேலம் அல்லது கோவைக்கு அனுப்பவேண்டிய நிலைமை உள்ளது.
எனவே, இந்த மருத்துவமனையை பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையாக தரம் உயா்த்தி, அனைத்து வகையான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், நோயாளிகள் எண்ணிக்கைக்கேற்ப மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
இதேபோல, ஈரோட்டில் உள்ள தந்தை பெரியாா் அரசு தலைமை மருத்துவமனையிலும் பணியாளா்கள் பற்றாக்குறை காணப்படுகிறது. எனவே, இந்த மருத்துவமனையிலும் உரிய பணியாளா்கள் நியமித்து நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.