பகவதி அம்மன் கோயில் திருவிழா: திருவனந்தபுரத்துக்கு மாா்ச் 12 முதல் சிறப்பு ரயில்
மொடக்குறிச்சியில் தேமுதிக பொதுக் கூட்டம்!
தேமுதிகவின் 25-ஆம் ஆண்டு வெள்ளிவிழா பொதுக் கூட்டம் மொடக்குறிச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஈரோடு மாவட்டத் தலைவா் செல்வகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் சதீஷ்குமாா், மாவட்ட துணைச் செயலாளா் ஆனந்தன், மாவட்ட மகளிா் அணி செயலாளா் செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மொடக்குறிச்சி ஒன்றிய பொறுப்பாளா் கணபதி வரவேற்றாா்.
இதில், மாநில பட்டதாரி ஆசிரியா் அணி துணைச் செயலாளா் செல்வராஜ் கலந்துகொண்டு பேசினாா்.
இக்கூட்டத்தில் ஒன்றியச் செயலாளா்கள் பெருந்துறை வெங்கடாசலபதி, பவானி செல்வம், சென்னிமலை சுந்தா், மொடக்குறிச்சி பேரூா் செயலாளா் மாசிலாமணி, பவானி நகரச் செயலாளா் மெய்யழகன், சென்னிமலை நகரப் பொறுப்பாளா் சத்யராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். கூட்டத்தில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.