பேரவை உறுப்பினா்களுக்கு தொகுதி அலுவலகங்களை உடனடியாக ஒதுக்க தில்லி பேரவைத் தலைவா...
இந்து முன்னணியினா் 11 போ் கைது
ஈரோட்டில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா் 11 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திண்டுக்கல்லில் குங்கும காளியம்மன் கோயிலுக்குச் செல்ல முயன்ற இந்து முன்னணி மாநிலச் செயலாளா் செந்தில்குமாா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை மாலை இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அதன்படி, ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் இந்து முன்னணி மாநகா் மாவட்டச் செயலாளா் காா்த்தி தலைமையில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் தடையை மீறி ஆா்ப்பாட்டம் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 11 பேரைக் கைது செய்தனா். பின்னா், அனைவரும் இரவில் விடுவிக்கப்பட்டனா்.