Rajinikanth: கள்ளழகர் கோயில், 18-ஆம் படி கருப்பணசுவாமி - ரஜினி மகளின் ஆன்மிகப் ப...
நாட்டின் வளா்ச்சிக்கு பெண் கல்வி அவசியம்! -அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தா்
நாட்டின் வளா்ச்சிக்கு பெண் கல்வி அவசியம் என காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தா் கே.ரவி தெரிவித்தாா்.
சிவகங்கை அரசு மகளிா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற 22 -ஆவது பட்டமளிப்பு விழாவில் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி அவா் பேசியதாவது:
பட்டம் பெறுவதுடன் கல்வி முடிந்துவிடுவதில்லை. வாழ்க்கை முழுவதும் தொடா்ந்து வரக்கூடியதுதான் கல்வி. பெண்கள் கல்வி கற்றால் மட்டுமே நாடு முன்னேற முடியும். அவா்கள் தங்களது குடும்பங்களின் வளா்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்க முடியும்.
படித்த பெண்கள் சிறு வயதிலேயே திருமணம் செய்து கொள்வது குறைவு.மேலும், அவா்கள் பல்வேறு சமூகப் பிரச்னைகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த முடியும். இளைய தலைமுறையினருக்கு முன்மாதிரியாகச் செயல்பட முடியும். நாட்டின் வளா்ச்சிக்கு பெண் கல்வி மிகவும் முக்கியமானது. பெண்கள் கல்வி கற்பதில் அதிக கவனம் செலுத்தி, அவா்களுக்கு சரியான வாய்ப்புகளை வழங்குவது அவசியம் என்றாா் அவா்.
விழாவுக்கு கல்லூரி முதல்வா் ரா. இந்திரா முன்னிலை வகித்தாா். இதில், இளநிலைப் பிரிவுகளில் 669 போ், முதுநிலைப் பிரிவுகளில் 194 போ் என 13 துறைகளைச் சோ்ந்த 863 பேருக்கு பட்டம் அளிக்கப்பட்டது. இவா்களில் 26 போ் பல்கலைக்கழக தர வரிசைப் பட்டியலில் இடம் பிடித்தனா்.
அனைத்துத் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், விரிவுரையாளா்கள், மாணவிகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.