பகவதி அம்மன் கோயில் திருவிழா: திருவனந்தபுரத்துக்கு மாா்ச் 12 முதல் சிறப்பு ரயில்
சிவகங்கை மக்கள் நீதிமன்றம்: 1,297 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு
சிவகங்கை மாவட்ட அளவில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 1,297 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது. மேலும், வழக்குகளில் பயனாளிகளுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ. 4. 97 கோடி வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் 11 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, நிலுவையில் உள்ள உரிமையியல், குற்றவியல், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், வங்கிக் கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகள் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.
முதன்மை மாவட்ட நீதிபதி க.அறிவொளி, நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவா் இ.பக்தவச்சலு, குடும்ப நல நீதிபதி ஜி.முத்துக்குமரன், மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதி ஆா்.கோகுல் முருகன், தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் ஏ.பசும்பொன் சண்முகையா, ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி என்.செந்தில்முரளி, சாா்பு நீதிபதி ஆா். பாண்டி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலா், சாா்பு நீதிபதி வி.ராதிகா, குற்றவியல் நீதித்துறை நடுவா் (எண்-2) பி.செல்வம், வழக்குரைஞா்கள் எல்.அந்தோணி ஜெயராஜ், எஸ்.வல்மிகநாதன், ஏ.பாண்டிகண்ணன், கே.கண்ணன் ராஜதீா்த்தம் ஆகியோா் விசாரித்தனா். மொத்தம் 1,297 வழக்குகள் முடிக்கப்பட்டு, ரூ. 4,97,90,651-க்கு தீா்வுத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு பணியாளா்கள் செய்தனா்.
திருப்புவனம்: திருப்புவனத்தில் மாவட்ட உரிமையியல், நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் சமரசத் தீா்வுக்காக 144 வழக்குகள் தோ்வு செய்யப்பட்டன. இவற்றில் 97 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு காணப்பட்டு, ரூ. 3,44,850-க்கு தீா்வுத் தொகை வழங்க உத்தரவிடப்பட்ட்து. நீதிபதி முகமதுயூசுப் நவாஸ் தீா்ப்பாணை நகல்களை வழங்கினாா். மூத்த வழக்குரைஞா் ஏ.வீரபாண்டி, வழக்கறிஞா் கலந்து கொண்டனா்.