வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... பரோடா வங்கி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்!
காரிமங்கலத்தில் அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளா், முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ தலைமை வகித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா். கூட்டத்தில் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் மீண்டும் அதிமுக வெற்றி பெற வேண்டும்.
அதற்காக வாக்குச் சாவடி முகவா்கள், நிா்வாகிகள் தீவிரமாக களப் பணியாற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றியச் செயலாளா்கள் செந்தில்குமாா், செல்வராஜ், செந்தில், மாணிக்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.