மணிப்பூரில் காலவரையற்ற வேலைநிறுத்தம்! இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
649 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.80.82 கோடி கடனுதவி! -ஆட்சியா் வழங்கினாா்
தருமபுரி அருகே பைசுஅள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் 649 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 80.82 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டன.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற உலக மகளிா் தின விழா நிகழ்ச்சியில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன், அரசு நலத்திட்ட உதவிகளை காணொலியில் வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து தருமபுரி அருகே நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தலைமை வகித்து, 649 மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 9,123 பயனாளிகளுக்கு ரூ. 80.82 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கிப் பேசினாா். இதில் தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ.மணி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் 649 மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 9,052 பயனாளிகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கடன் உதவிகளும், கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் ரூ. 80.46 கோடி வங்கிக் கடன் உதவிகளும், கூட்டுறவு துறையைச் சாா்ந்த மூன்று மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சாா்ந்த 30 பயனாளிகளுக்கு ரூ. 28.90 லட்சம் வங்கிக் கடன் உதவிகளும், வருவாய் துறையின் கீழ் 6 பயனாளிகளுக்கு ரூ. 3 லட்சம் மதிப்பிலான இ-பட்டாக்களும், வேளாண் பொறியியல் துறையின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ. 3.70 லட்சம் மதிப்பிலான பவா் டில்லா் இயந்திரங்களும், மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் என மொத்தம் 649 மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 9,123 பயனாளிகளுக்கு ரூ. 80.82 கோடி மதிப்பிலான கடனுதவிகள், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதையடுத்து, மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்க மகளிா் திட்டம் சாா்பாக அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை ஆட்சியா் ரெ.சதீஸ் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.
மகளிா் திட்ட இயக்குநா் அ.லலிதா, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநா் எஸ்.மலா்விழி, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் தடங்கம் பெ.சுப்ரமணி, தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பி.தா்மச்செல்வன், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், உதவி மகளிா் திட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.