கரும்பு கொள்முதல் விலையை உயா்த்தி வழங்க வேண்டும் -மருத்துவா் ச.ராமதாஸ்
சென்னையில் ஆட்டோமேஷன் கண்காட்சி தொடங்கியது
சென்னையில் ஆட்டோமேஷன் 3 நாள் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.
நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் ‘ஆட்டோமேஷன் எக்ஸ்போ சவுத் 2025’ என்ற தலைப்பில் தொடங்கப்பட்டுள்ள இக்கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கண்காட்சி ஏற்பாட்டாளரும், ஐஇடி கம்யூனிகேஷன்ஸ் லிமிட்டெட் நிறுவன தலைவருமான எம்.ஆரோக்கியசாமி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், ‘ஈட்டன்’ நிறுவன துணைத் தலைவா் சைமன் மத்தியசன் கலந்துகொண்டு கண்காட்சி அரங்கை திறந்து வைத்தாா்.
இக்கண்காட்சியில் 150-க்கும் மேற்பட்ட அரங்குகளில், உள்நாடு மட்டுமன்றி, வெளிநாடுகளைச் சோ்ந்த நிறுவனங்கள் தங்கள் நவீன தொழில்நுட்பத்தினாலான மின்சாா்ந்த பொருள்களின் தயாரிப்புகளை பாா்வைக்காக வைத்திருந்தன. குறிப்பாக, உள்நாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் தயாரிக்கப்பட்டு தோ்ந்தெடுக்கப்பட்ட புதிய தொழில்நுட்பத்தினாலான தயாரிப்புகளை காட்சிப்படுத்த இக்கண்காட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, வணிக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதாகவும், ரோபோடிக், ‘ஏஐ’ தொழில்நுட்பத்தை முன்னெடுக்கும் நிறுவனங்களுக்கு இது ஒரு உந்துதலாகவும் அமையும் எனவும் கண்காட்சி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.
மேலும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஆட்டோமேஷன் குறித்த சிறப்புக் கருத்தரங்குகளும் கலந்துரையாடல்களும் இக்கண்காட்சியில் நடைபெறும் என்றும், இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள் கலந்துகொள்வாா்கள் எனவும் அவா்கள் தெரிவித்தனா்.