'மும்மொழிக் கொள்கைக்காக ரெய்டு; குழந்தைகளிடம் கையெழுத்தே வாங்கக் கூடாது' - உதயநி...
யானை தாக்கி விவசாயி காயம்
பென்னாகரம் அருகே ஒற்றை யானை தாக்கியதில் விவசாய நிலத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயி பலத்த காயமடைந்தாா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வனப்பகுதியையொட்டி உள்ள ஜோனப்பாறை வனப்பகுதியில் இருந்து தினசரி இரவு நேரங்களில் உணவு, தண்ணீா் தேடி வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களுக்கு யானை கூட்டம் நுழைகின்றன.
இந்த நிலையில், பென்னாகரம் அருகே எரங்காடு பகுதியைச் சோ்ந்த முனியப்பன் மகன் முருகன் (57) என்பவா் தனது விவசாய நிலத்தில் இரவு நேரத்தில் காவலுக்காக குடில் அமைத்துத் தங்கியுள்ளாா். இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியே வந்த ஒற்றை யானை அவா் அமைத்திருந்த குடிலை இடித்து விவசாயியைத் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த விவசாயி முருகனை அப்பகுதி மக்கள் மீட்டு பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனா். தகவல் அறிந்ததும் ஒகேனக்கல் வனத்துறையினா் நிகழ்விடம் சென்று யானையின் வழித்தடம், பாதிப்புகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.