லாரியை மறித்து பணத்தை பிடுங்கிய ஆர்.டி.ஓ அலுவலக டிரைவர், புரோக்கர் கைது..
மெஸ்ஸி இல்லாமலே ஜமைக்கா அணியை வீழ்த்திய இன்டர் மியாமி!
மெஸ்ஸி இல்லாமலே 2-0 என ஜமைக்காவின் அணியை வீழ்த்தியது இன்டர் மியாமி அணி.
வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, கரீபியன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கிளப்புகளுக்காக நடைபெறும் கால்பந்து போட்டியான கான்கேகேஃப் (CONCACAF)ஆல் ஏற்பாடு செய்யப்படும் வருடாந்திர சர்வதேச கிளப் போட்டியான கான்கேகேஃப் சாம்பியன்ஸ் லீக்கில் இன்டர் மியாமி அணி குரூப் ஆஃப் 16இல் முதல் லெக் போட்டியில் ஜமைக்காவின் கவாலியர் கிளப்பை 2-0 என வீழ்த்தியது.
அமெரிக்காவில் சேஸ் திடலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மெஸ்ஸி இல்லாமல் களமிறங்கிய இன்டர் மியாமி அணி முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்காமல் திணறியது.
முதல் பாதியில் கவாலியர் அணி அடித்த ஒரு கோல் ஆப்-சைடால் பறிபோனது.
இரண்டாம் பாதியில் மீண்டெழுந்த இன்டர் மியாமி 61, 83ஆவது நிமிஷங்களில் டடியோ அல்லெண்டி, லூயிஸ் சௌரேஸ் கோல் அடித்து அசத்தினார்கள்.
குரூப் ஆஃப் 16இல் இரண்டாவது லெக்கில் மார்ச்.13ஆம் தேதி ஜமைக்காவில் கிங்ஸ்டன் மைதனாத்தில் இன்டர் மியாமி அணி கவாலியரை எதிர்கொள்ளவிருக்கிறது.
8 முறை பேலன் தோர் விருது வென்ற மெஸ்ஸி பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். ஆனால், போட்டி தொடங்குவதற்கு ஒரு மணிநேரம் முன்பு அணியில் அவரது பெயர் அறிவிக்கப்படவில்லை.
பிரைவேட் பாக்ஸில் இருந்து மெஸ்ஸி இந்தப் போட்டியை கண்டு ரசித்தது குறிப்பிடத்தக்கது.
கவாலியர் அணி ஜமைக்காவின் பிரீமியர் லீக்கை கடந்த சீசனில் வென்றிருந்தது. மேலும், டிசம்பரில் கான்கேகேஃப் கரீபியன் கோப்பையை வென்று இந்தத் தொடரில் இடம் பிடித்தது.
GANAMOS
— Inter Miami CF (@InterMiamiCF) March 7, 2025
️ See you on Sunday for more fútbol: https://t.co/3Sjf6kxPGppic.twitter.com/Ei6UCppYN9