மின்சாரம் பாய்ந்து கேங்மேன் உயிரிழப்பு
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மின்கம்பத்தில் ஏறி வியாழக்கிழமை பணியில் ஈடுபட்ட கேங்மேன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், எசனை கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கராசு மகன் ராஜாராம் (28). ஜெயங்கொண்டம் கிளை மின் வாரிய அலுவலக கேங்மேனான இவா் வியாழக்கிழமை அா்த்தனேரி கிராமத்தில், மின்கம்பத்தின் மீது ஏறி பணி செய்தபோது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இது குறித்து ஜெயங்கொண்டம் காவல் துறையினா் விசாரிக்கின்றனா்.