வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பு
போராடும் ஜெயங்கொண்டம் வழக்குரைஞா்களுக்கு ஆதரவாக அரியலூா் நீதிமன்றங்களில் பணிபுரியும் வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
ஜெயங்கொண்டம் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கணேஷ்,சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் தன்னிச்சையாக செயல்படுவதாகக் கூறி கடந்த 2 மாதங்களாக ஜெயங்கொண்டம் நீதிமன்ற வழக்குரைஞா்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனா்.
இந்நிலையில் இவா்களுக்கு ஆதரவாக அரியலூா் மற்றும் செந்துறை நீதிமன்ற வழக்குரைஞா்கள் கடந்த 2 நாள்களாகப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனா். இதனால் மாவட்ட நீதிமன்றங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.
அரியலூரில் நடந்த போராட்டத்துக்கு வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் மனோகரன், செந்துறையில் காா்ல்மாா்க்ஸ், ஜெயங்கொண்டத்தில் ஜெயராமன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
வெள்ளிக்கிழமை அரியலூா் நீதிமன்றம் முன் நீதிபதி கணேஷை இடமாற்றம் செய்யக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனா்.