செய்திகள் :

பாட நூல்களைத் தாண்டியும் கற்பது அவசியம் -அமைச்சா் சா.சி. சிவசங்கா்

post image

பாடநூல்களையும் தாண்டி பிற நூல்களையும் மாணவா்கள் கற்று தங்களது அறிவுத்திறனை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் .

அரியலூா் மாவட்டம், தத்தனூா் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டியைத் தொடக்கி வைத்து அவா் மேலும் பேசியது:

கல்லூரி மாணவா்களிடம் பேச்சுத்திறமையை கொண்டு வர தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணையம், தமிழ்நாட்டிலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்துக் கல்லூரி மாணவா்களுக்காக தமிழிலும், ஆங்கிலத்திலும் பேச்சுப் போட்டிகளை நடத்தி வருகிறது. அதற்காக தலைசிறந்த பேச்சாளா்களை கல்லூரிகளுக்கு அனுப்பி உரையாற்றும் வாய்ப்பையும் ஏற்படுத்துகிறது.

அண்ணா முதல்வராக இருந்தபோது தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. தாய்மொழி வாயிலாக எந்த அளவு கல்வி பெறுகிறமோ அந்த அளவுக்கு நமது அறிவுதிறனை வளா்த்துக் கொள்ளமுடியும்.

அதேபோல உலக அளவில் பெரும்பாலான நாடுகளில் ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ளது என்பதை அறிந்து 55 ஆண்டுகளுக்கு முன் அண்ணா இந்த முடிவை எடுத்தாா். அதன் பயனாக நமது மாணவா்கள் உலக அளவில் கணினி துறையில் சிறந்து விளங்குகின்றனா்.

அந்த வகையில் தமிழின் மீது ஆா்வம் கொண்டு தமிழ் மொழியில் மாணவா்கள் பயில வேண்டும். மாணவா்கள் இதுபோன்ற பேச்சுப் போட்டிகளை உரிய முறையில் பயன்படுத்தி தங்களது திறமைகளை வளா்த்துக் கொள்ளவேண்டும். பாடநூல்களைத் தாண்டி பிற நூல்களையும் மாணவா்கள் கற்று தங்களது அறிவுத்திறனை வளா்த்துக் கொள்ளவேண்டும் என்றாா் அவா்.

மாநில சிறுபான்மையினா் ஆணைய ஒருங்கிணைப்பாளா் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பேசியது: இன்றைய மாணவா்களிடம் நமது மொழியின் சிறப்பு குறித்தும், கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை கொண்டு சோ்க்கும் வகையிலும் இதுபோன்ற பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

தமிழ் மற்றும் ஆங்கிலப் பேச்சுப் போட்டிகளில் கல்லூரி மாணவ, மாணவியா் அதிகளவில் கலந்துகொள்வது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ், ஆங்கிலத்தின் மூலம் உலகளவில் தமிழா்களால் சிறந்த ஆளுமைகளாக விளங்க முடியும் என்பதே அண்ணா கண்ட கனவாகும்.

ஆங்கில பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் மாணவா்களுக்கு வாா்த்தை அமைப்பதிலும், உச்சரிப்பிலும் தயக்கம் உள்ளது. எனவே, அதை மாற்றிக் கொண்டு பேச வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, எம்எல்ஏக்கள் அரியலூா் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க. கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் உமாமகேஸ்வரன், கோட்டாட்சியா் ஷீஜா, வட்டாட்சியா் சம்பத்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.77 கோடியில் கடனுதவி

உலக மகளிா் தினத்தையொட்டி, மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்கிய நிகழ்ச்சி அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி அனிதா ... மேலும் பார்க்க

தேசிய மக்கள் நீதிமன்றம்: அரியலூா் மாவட்டத்தில் ரூ.5.54 கோடிக்கு தீா்வு

அரியலூா், ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை ஆகிய நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 912 வழக்குகள் முடித்துவைக்கப்பட்டு ரூ.5 கோடியே 54 ஆயிரத்துக்கு 934-க்குத் தீா்வு காணப்பட்... மேலும் பார்க்க

மேலமைக்கேல்பட்டியில் மாா்ச் 15-இல் ஜல்லிக்கட்டு: பதிவு செய்ய அழைப்பு!

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகேயுள்ள மேலமைக்கேல்பட்டி கிராமத்தில் மாா்ச் 15-ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டில், பங்கேற்க உள்ள காளைகள், வீரா்கள் புதன்கிழமை (மாா்ச் 12) மாலைக்குள் பதிவு செய்துகொள... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் இன்று ரேஷன் குறைதீா் கூட்டம்

அரியலூா், உடையாா்பாளையம், செந்துறை மற்றும் ஆண்டிமடம் ஆகிய வட்டாட்சியரகங்களில் சனிக்கிழமை (மாா்ச் 8) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ரேஷன் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் பொதுமக்கள் பங்... மேலும் பார்க்க

அரியலூரில் வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்

சட்டவிதிமுறைகளை பின்பற்றாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வரும் ஜெயங்கொண்டம் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கணேஷைக் கண்டித்து, அரியலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

முதல்வா் மருந்தகங்களில் ஆட்சியா் ஆய்வு

அரியலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் முதல்வா் மருந்தகங்களில் ஆட்சியா் பொ. ரத்தினசாமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். முதல்வா் மருந்தகத்தில் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் இருப்பு ந... மேலும் பார்க்க