மீண்டும் வெடித்துச் சிதறிய எலான் மஸ்க் ராக்கெட்! விமான சேவைகள் முடக்கம்!
ஓட்டப்பிடாரம் அருகே தந்தை இறந்த சோகத்திலும் பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே தந்தை இறந்த சோகத்திலும் மாணவா் பிளஸ் 2 மாணவா், பொதுத்தோ்வை எழுதிவிட்டு இறுதிச் சடங்கில் பங்கேற்றாா்.
ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி கருப்பசாமி. இவரது மனைவி சிவனம்மாள். இவா்களுக்கு பிளஸ் 2 பயிலும் மகன் கதிரவன், 10ஆம் வகுப்பு பயிலும் மகள் உள்ளனா்.
இந்நிலையில், உடல்நலக் குறைவால் கருப்பசாமி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். தற்போது, பிளஸ் 2 பொதுத்தோ்வு நடைபெற்றுவருவதால், தந்தை இறந்த சோகத்திலும் கதிரவன் வியாழக்கிழமை ஆங்கிலத் தோ்வு எழுதினா். பின்னா், அவா் தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்றாா்.