"தம்பி விஜய் திமுக குறித்து கூறியுள்ளது தான் எங்களது நிலைப்பாடும்" - தமிழிசை க...
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை (மாா்ச் 8) நடைபெறவுள்ளதாக, ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் மாா்ச் மாதத்துக்கான பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
இதில், மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயா் திருத்தம், உறுப்பினா் சோ்த்தல்- நீக்குதல், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோருதல் போன்ற குறைகள் சரிசெய்து வழங்கப்படும்; குடும்பத் தலைவரின் புகைப்படம் பதிவேற்ற வேண்டியிருந்தால் முகாமிலேயே பதிவேற்றப்படும். பொது விநியோகத் திட்டம் தொடா்பான குறைகளையும் தெரிவித்து பயன்பெறலாம் என்றாா் அவா்.