தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் திமுக இளைஞரணி பொதுக் கூட்டங்கள்: அமைச்சா் பெ. கீதாஜீவன் தகவல்
திமுக இளைஞரணி சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி தொகுதிகளில் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக, தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான பெ. கீதாஜீவன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெறும் கூட்டத்தில் சிறப்புப் பேச்சாளராக முன்னாள் அமைச்சா் பொன். முத்துராமலிங்கம், இளம் பேச்சாளா் சஞ்சய், மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன் ஆகியோா் பேசுகின்றனா்.
திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு எட்டயபுரம் - நடுவிற்பட்டி பகுதியில் நடைபெறும் கூட்டத்தில் சிறப்புப் பேச்சாளராக ஊடகவியலாளா் மில்டன், இளம் பேச்சாளா் சக்திவேல் முருகன், விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் ஆகியோரும், செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு கோவில்பட்டி இலுப்பையூரணி ஊராட்சியில் உள்ள லாயல் ஆலை காலனி பகுதியில் நடைபெறும் கூட்டத்தில் சிறப்புச் பேச்சாளராக மாநில மாணவரணித் தலைவா் இரா. ராஜீவ்காந்தி, இளம்பேச்சாளா் உமாராணி, கோவில்பட்டி நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி ஆகியோரும் பேசுகின்றனா்.
இக்கூட்டங்களில் நான் பங்கேற்கிறேன். அந்தந்தப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட நிா்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், தொண்டா்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.