பேரவை உறுப்பினா்களுக்கு தொகுதி அலுவலகங்களை உடனடியாக ஒதுக்க தில்லி பேரவைத் தலைவா...
அணுக்கழிவுகளைக் கொட்டுவதாக வதந்தி பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்.பி. எச்சரிக்கை
அணுக் கழிவுகளைக் கொட்டுவதாக வதந்தி பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் அணுக் கழிவுகளைக் கொட்டுவதாக சிலா் வதந்தி பரப்புவதாக தெரியவந்துள்ளது.
அவா்கள் பதற்றத்தை ஏற்படுத்தி பொது அமைதியைக் குலைக்கும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட முயல்வதாகவும் தெரியவந்துள்ளது. ஆனால், மாவட்டத்தில் அணு நிலையம் செயல்படவில்லை. அணுக் கழிவு வெளியேற்றப்படவில்லை. மேலும், அணுக் கழிவைக் கொட்டுவதற்காக தனியாக இடமுமில்லை.
எனவே, ஆதாரமற்ற வதந்திகளை நம்பவோ, பரப்பவோ வேண்டாம். தவறான தகவல்களைப் பரப்புவோா் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.