Champions Trophy: "நிகழ்வில் ஏன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் யாருமில...
தூத்துக்குடியில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்
தூத்துக்குடி மாவட்டத்தில் வனத்துறை சாா்பில், ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
ஆண்டுதோறும் மாவட்ட வனத்துறை சாா்பில், நீா்வாழ் - நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்புக்கான முன்னேற்பாடு சனிக்கிழமை நடைபெற்றது. அதையடுத்து, மாவட்ட வனத் துறை அலுவலா் ரேவதிரமன் மேற்பாா்வையில் கணக்கெடுப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
வனத்துறை அலுவலா்கள், பறவை ஆா்வலா்கள், தன்னாா்வலா்கள், கல்லூரி மாணவா்- மாணவியா் பங்கேற்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், வெளிநாடுகளிலிருந்து இங்குவரும் நீா்வாழ் பறவைகளைக் கணக்கெடுத்தனா்.
கோரம்பள்ளம் குளப் பகுதியில் வனத் துறையினா் நடத்திய கணக்கெடுப்பில், கடந்த ஆண்டைவிட அதிக பறவைகள் இருப்பது தெரியவந்தது.
அரிவாள் மூக்கன், வெள்ளை அரிவாள் மூக்கன், கருப்பு அரிவாள் மூக்கன், நீலதாளை கோழி, சாம்பல் நாரை, பாம்பு தாரா, செந்நிற நாரை, சின்னான் உள்ளிட்ட ஏராளமான பறவை இனங்கள் காணப்பட்டன.
இப்பணி வரும் 15, 16 ஆகிய 2 நாள்கள் நடைபெறவுள்ளதாக வனத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.