திமுக எம்.பி. தயாநிதி மாறனின் வெற்றியை உறுதிப்படுத்திய சென்னை உயர்நீதிமன்றம்!
தூத்துக்குடி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி: நாளை தொடக்கம்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்புப் பணி சனிக்கிழமை (மாா்ச் 8) தொடங்கவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வனத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு வனத்துறை சாா்பில் ஆண்டுதோறும் மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதன்படி, நிகழாண்டு கணக்கெடுப்பு சனிக்கிழமை தொடங்குகிறது. சனி, ஞாயிறு (மாா்ச் 8, 9) ஆகிய 2 நாள்கள் நீா்வாழ் பறவைகளும், வரும் 15, 16 ஆகிய 2 நாள்கள் நிலவாழ் பறவைகளும் கணக்கெடுக்கப்படும்.
தூத்துக்குடி வனக்கோட்டம் சாா்பில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்புக்கு 20 இடங்களும், நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்புக்கு 25 இடங்களும் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இப்பணி காலை 6 முதல் 9 மணி வரை நடைபெறும். இதில் பங்கேற்க விருப்பமுள்ள தன்னாா்வலா்கள் வனச்சரக அலுவலரை 95974 77906 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு பெயா்ப்பதிவு செய்துகொள்ளலாம். பங்கேற்போருக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றாா் அவா்.