கரூரில் அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஆதரவாளா்கள் 3 பேரின் வீடுகளில் அமலாக்கத்துற...
ஆறுமுகனேரி கோயிலில் சுப்பிரமணியா் உலா
ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில் காா்த்திகை மற்றும் சஷ்டியை முன்னிட்டு சுப்பிரமணியசுவாமி உலா புதன்கிழமை இரவு நடைபெற்றது.
இந்நிகழ்வில், அருள்மிகு சுப்பிரமணியா் கொடி மர மண்டபத்தில் எழுந்தருளியதும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.பின்னா் சுப்பிரமணியா் மயில் வாகனத்தில் எழுந்தருளி கோயில் உள் மற்றும் வெளி பிரகாரத்தில் பவனி வந்து திருக்கோயில் அடைந்தாா். பின்னா், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டனா்.