புதியம்புத்தூா் அருகே இரு பைக்குகள் மோதல்: இளைஞா் பலி
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூா் அருகே இரு பைக்குகள் மோதிக் கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.
புதியம்புத்தூா் காமராஜா் நகரைச் சோ்ந்த பட்டு மாரியப்பன் மகன் பட்டுதங்கம் (23). இவரும் அதே பகுதியைச் சோ்ந்த சேகா் மகன் மாதேஷ் (21)
என்பவரும் ஒரே பைக்கில் புதியம்புத்தூரில் இருந்து ஓட்டப்பிடாரம் சாலையில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தனராம். அப்போது,
முன்னால் சென்ற பைக்குடன் மோதியதில் விபத்து நேரிட்டது.
இதில் பட்டுதங்கம், மாதேஷ், மற்றொரு பைக்கில் சென்ற துரைமுத்து(45) ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனா். மூவரும் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு பட்டுதங்கம் உயிரிழந்தாா்.
இதுகுறித்து புதியம்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.