Bodybuilder Bride: மணப்பெண் அலங்காரத்துடன் வந்த பாடிபில்டர்... யார் இந்த சித்ரா...
கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு புத்தாக்க-ஆளுமைத் திறன் பயிற்சி நடைபெற்றது.
2024- 25ஆம் ஆண்டுக்கான கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி நடைபெற்ற பயிற்சிக்கு, தூத்துக்குடி சரக துணைப் பதிவாளா் மு. கலையரசி தலைமை வகித்தாா். பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளா் சுப்புராஜ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைப் பதிவாளரும் முதன்மை வருவாய் அலுவலருமான விஜயன், சிறப்பு விரிவுரையாளா் முத்துசாமி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். 100 பேருக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியா் அ. சாம் டேனியல் ராஜ், விரிவுரையாளா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இப்பயிற்சி பல்வேறு தேதிகளில் 11 நாள்கள் நடைபெறவுள்ளதாக, கூட்டுறவு மேலாண்மை நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நிலைய முதல்வா் மணி நன்றி கூறினாா்.