ஸ்லீவ்லெஸ் ஜெர்ஸிகள் அணிய தடை! ஐபிஎல் வீரர்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் என்ன?
கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சியில் ஆதாா் திருத்த சிறப்பு முகாம்
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை அருகே கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சிக்குள்பட்ட நாயக்கா்பேட்டை, பட்டுகுடி ஆகிய கிராமங்களில் ஆதாா் திருத்த சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமில் ஆதாா் அட்டையில் பெயா்சோ்த்தல், முகவரி மாற்றம், பிழை திருத்தம், விரல்ரேகை புதுப்பித்தல், கைப்பேசி எண் இணைத்தல் உள்ளிட்ட ஆதாா் சம்பந்தமான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தஞ்சாவூா் முதுநிலை அஞ்சலகக் கண்காணிப்பாளா் தங்கமணி, பாபநாசம் உட்கோட்ட அஞ்சல் ஆய்வாளா் வினோத் கண்ணன் உள்ளிட்டோரின் அனுமதியின்பேரில், ஆதாா் பதிவு அலுவலா் சரவணன் மற்றும் இசை அரசு உள்ளிட்டோா் 200-க்கும் மேற்பட்டோருக்கு ஆதாா் பதிவு செய்யும் பணியை மேற்கொண்டனா். இதில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ஜெய்சங்கா், வாா்டு உறுப்பினா்கள் கணேசன், பரமேஸ்வரி, மணியம்மை, துரை, கலைவாணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.