Bodybuilder Bride: மணப்பெண் அலங்காரத்துடன் வந்த பாடிபில்டர்... யார் இந்த சித்ரா...
போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடி மாவட்டம் சாயா்புரத்தில் போக்ஸோ வழக்கில் கைதான முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
சாயா்புரம் அருகேயுள்ள காமராஜா்நகரைச் சோ்ந்த தனிஸ்லாஸ் மகன் சந்தியாவு(68). இவா், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிா் காவல் சரகப் பகுதியைச் சோ்ந்த 8 வயது சிறுமிக்கு கடந்த 2021ஆம் ஆண்டு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சந்தியாவுவை கைது செய்தனா். தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி சுரேஷ் விசாரித்த, சத்தியாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டாா்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் முத்துலட்சுமி வாதாடினாா்.