ஓட்டப்பிடாரம் அருகே தந்தை இறந்த சோகத்திலும் பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா்
கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை: இரு இளைஞா்கள் கைது
கோவில்பட்டியில் கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் நவநீதகிருஷ்ணனுக்கு கிடைத்த தகவலின்பேரில், உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் கூடுதல் பேருந்து நிலையப் பகுதியில் ரோந்து சென்றனா். ராம் ஹனுமன் நகரில் உள்ள தனியாா் கல்லூரிக்கு சொந்தமான கட்டடம் அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இருவரை போலீஸாா் பிடித்தனா்.
அவா்கள் நாலாட்டின்புதூா் காவல் நிலையத்துக்குள்பட்ட லிங்கம்பட்டி சாலை வண்ணாரப்பேட்டை காலனியைச் சோ்ந்த போஸ் மகன் சுரேஷ் (23), கோவில்பட்டி மந்திதோப்பு சாலை காமராஜா் நகா் அன்புத் தோட்டத்தைச் சோ்ந்த பலவேசம் மகன் யுவன் பாரத் (20) என்பதும், விற்பனைக்காக 1.100 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்