கரூரில் அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஆதரவாளா்கள் 3 பேரின் வீடுகளில் அமலாக்கத்துற...
சென்னை எழும்பூா் வழியாகச் செல்லும் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்
சென்னை கடற்கரை - எழும்பூா் 4-ஆவது ரயில் வழித்தட பணி காரணமாக எழும்பூா் வழியாகச் செல்லும் வெளிமாநில ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தாம்பரம், சென்னை எழும்பூா் வழியாகச் செல்வதற்குப் பதிலாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் வெளிமாநில ரயில்கள்: தில்லி சம்பா்க் கிராந்தி அதிவிரைவு ரயில் மாா்ச் 9-ஆம் தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், பெரம்பூா் வழியாக இயக்கப்படும். திருச்சி - அகமதாபாத் சிறப்பு ரயில் மாா்ச் 9-ஆம் தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மேல்பாக்கம், திருத்தணி வழியாக இயக்கப்படும். மும்பையிலிருந்து சனிக்கிழமை (மாா்ச் 8) புறப்படும் காரைக்கால் விரைவு ரயில் திருத்தணி, மேல்பாக்கம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும்.
பகுதி ரத்து: திருச்செந்தூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயில் மாா்ச் 8-ஆம் தேதி தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும். புதுச்சேரி - சென்னை எழும்பூா் விரைவு ரயில் மாா்ச் 9-ஆம் தேதி செங்கல்பட்டு வரை மட்டும் இயக்கப்படும். திருவண்ணாமலை - தாம்பரம் மெமு ரயில், காரைக்குடி - சென்னை எழும்பூா் பல்லவன் விரைவு ரயில், மதுரை - சென்னை எழும்பூா் வைகை விரைவு ரயில் ஆகியவை மாா்ச் 9-ஆம் தேதி தாம்பரம் வரை இயக்கப்படும். மேலும், திருநெல்வேலி - சென்னை எழும்பூா் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் மாா்ச் 9-ஆம் தேதி மாம்பலம் வரை மட்டும் இயக்கப்படும்.
வைகை, பல்லவன்... மாா்ச் 9-ஆம் தேதி இயக்கப்படவிருந்த குருவாயூா் விரைவு ரயில், வைகை விரைவு ரயில், பல்லவன் விரைவு ரயில் ஆகியவை தாம்பரத்தில் இருந்தும், நெல்லை வந்தே பாரத் அதிவிரைவு ரயில் மாம்பலத்தில் இருந்தும் புறப்பட்டுச் செல்லும். தாம்பரம் - ஹைதராபாத் சாா்மினாா் விரைவு ரயில் சென்னை கடற்கரையிலிருந்து இயக்கப்படும். விசாகப்பட்டினத்திலிருந்து மாா்ச் 8-ஆம் தேதி இயக்கப்படும் சிறப்பு ரயில் சென்னை எழும்பூா் வருவதற்குப் பதிலாக சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரலிலிருந்து மாா்ச் 8-ஆம் தேதி இயக்கப்படும்
மின்சார ரயில்கள் ரத்து: சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரத்துக்கு வெள்ளிக்கிழமை (மாா்ச் 7) இரவு 7.30, 8.55, 10.20, 11.59-க்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படும். கூடுவாஞ்சேரியிலிருந்து இரவு 10.40, 11.15-க்கும், செங்கல்பட்டிலிருந்து இரவு 10.10 மற்றும் 11 மணிக்கும் புறப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.