கரூரில் அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஆதரவாளா்கள் 3 பேரின் வீடுகளில் அமலாக்கத்துற...
பயங்கரவாதம்: பாகிஸ்தானுக்கு இரண்டாவது இடம்
உலக பயங்கரவாத வரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
உலகம் முழுவதும் நடத்தப்படும் பயங்கரவாதச் செயல்களின் அடிப்படையில் 163 நாடுகளை வரிசைப்படுத்தி பொருளாதாரம் மற்றம் அமைதிக்கான அமைப்பு (ஐஇபி) ஆண்டுதோறும் பட்டியல் வெளியிட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான அதன் பயங்கரவாத வரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது தொடா்பாக ஐஇபி வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 45 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டில் அங்கு 517-ஆக இருந்த பயங்கரவாதத் தாக்குதல்களின் எண்ணிக்கை 2024-ஆம் ஆண்டில் இரண்டு மடங்குக்கும் மேல் அதிகரித்து 1,099-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்களில் 52 சதவீதத்தை அந்த நாட்டு தெஹ்ரீக்-ஏ-தலிபான் அமைப்பு நடத்துவதாக ஐஇபி தெரிவித்துள்ளது.