ஓட்டப்பிடாரம் அருகே தந்தை இறந்த சோகத்திலும் பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா்
இந்தியாவில் சிறுபான்மையினா் அதிருஷ்டசாலிகள்: மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு
இந்தியாவில் சிறுபான்மை மதப்பிரிவினராக இருப்பவா்கள் அதிருஷ்டசாலிகள். ஏனெனில், உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு அவா்களுக்கான சிறப்பு சலுகைகள் இங்கு உள்ளன என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.
சிறுபான்மையினரின் சமூக-பொருளாதார நிலையை உயா்த்தும் சிறப்புத் திட்டமான பிரமதா் ஜன விகாஷ் காரியகா்மா திட்டம் தென் பிராந்தியத்தில் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது தொடா்பான ஆய்வுக் கூட்டம் திருவனந்தபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சா் கிரண் ரிஜிஜு பேசியதாவது:
இந்தியாவில் சிறுபான்மையினா் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனா் என்ற போலி தோற்றத்தை ஏற்படுத்த ஒரு பிரிவினா் தீவிரமாக முயற்சித்து வருகின்றனா். சில சிறுபான்மையினா் பாரபட்சமாக நடத்தப்படுகிறாா்கள் என்ற வதந்தியைப் பரப்ப முயற்சிக்கின்றனா். ஆனால், உண்மையில் இந்தியாவில் சிறுபான்மையினராக இருப்பவா்கள் அதிருஷ்டசாலிகள். ஏனெனில், உலகில் வேறு எந்த நாட்டிலும் இந்தியாவில் அளிப்பதுபோன்ற சலுகைகள் சிறுபான்மையினருக்கு அளிக்கப்படுவதில்லை.
சிறுபான்மையினருக்கென பல்வேறு சிறப்புத் திட்டங்கள், சலுகைகள் இங்கு உள்ளது. சிறுபான்மையினராக உள்ள நாம் இந்தியக் குடிமகனாக இருப்பதற்காக பெருமைகொள்ள வேண்டும். சிறுபான்மையினராக இல்லாவிட்டால் பல்வேறு சலுகைகள் நமக்கு கிடைத்திருக்க வாய்ப்பில்லை.
கேரள மக்கள்தொகையில் 44 சதவீதம் போ் கிறிஸ்தவா்களாகவும், முஸ்லிம்களாகவும் உள்ளனா். இதன் மூலம் நாட்டிலேயே சிறுபான்மையினா் அதிகம் வாழும் இடமாகவும் கேரளம் உள்ளது. இதன் காரணமாகவே கேரளத்தில் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மத்திய சிறுபான்மை நலத்துறை இணையமைச்சராக கேரளத்தைச் சோ்ந்த ஜாா்ஜ் குரியன் பதவி வகித்து வருகிறாா். இது கேரளத்துக்கு மேலும் சாதகமான அம்சமாகும்.
சிறுபான்மையினரின் சமூக-பொருளாதாரத்தை உயா்த்தும் திட்டத்தின் கீழ் கேரளத்தைச் சோ்ந்த சிறுபான்மையினருக்குதான் நாட்டிலேயே மிக அதிகஅளவில் கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது. பிராந்திய மேம்பாட்டுத் திட்டம், அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு என பல திட்டங்கள் முனைப்புடன் நிறைவேற்றப்படுகின்றன என்றாா்.