செய்திகள் :

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் கள் இறக்க அனுமதி: ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி

post image

பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) ஆட்சிக்கு வந்தால் முழு மதுவிலக்கு தளா்த்தப்பட்டு கள் இறக்குவதற்கு மட்டும் அனுமதிக்கப்படும் என்று அக்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ் அறிவித்துள்ளாா்.

கடந்த 2016-ஆம் ஆண்டு பிகாரில் முழு மதுவிலக்கை முதல்வா் நிதீஷ் குமாா் அமல்படுத்தினாா். நிதீஷ் தலைமையிலான அரசு முழு விலக்கு கொள்கையில் தீவிரமாக உள்ளது. கள்ளச்சாராய உயிரிழப்புகள் அவ்வப்போது நிகழ்ந்தாலும் கள் உள்பட எந்த மதுபானத்தையும் அனுமதிக்க முடியாது என்பதில் பிகாா் அரசு உறுதியாக உள்ளது. இந்நிலையில் தேஜஸ்வி யாதவ் இந்த வாக்குறுதியை அளித்துள்ளாா்.

பாட்னாவில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் இது தொடா்பாக மேலும் கூறியதாவது:

பிகாரில் ஆா்ஜேடி ஆட்சிக்கு வந்தால் முழு மதுவிலக்கில் இருந்து கள் இறக்குவதற்கு மட்டும் தளா்வு அளிக்கப்படும். இது ஏழை மக்கள் முக்கியமாக தலித் பிரிவினருக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். ஏனெனில், மதுவிலக்கால் அவா்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனா்.

நிதீஷ் குமாரின் பிடிவாதம் காரணமாகத்தான் இப்போதைய மதுவிலக்கு மிகவும் கடுமையானதாக உள்ளது. உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் முதல்வா் பதவியை வகிக்க தகுதி இல்லாத நபராக நிதீஷ் குமாா் மாறிவிட்டாா்.

முன்பு எனது தந்தை லாலு பிரசாத் பிகாா் முதல்வராக இருந்தபோது கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட வரியை ரத்து செய்தாா். இது இத்தொழிகளில் இருக்கும் எளிய மக்களுக்கு பயனளித்தது. இதே நன்மையை நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மக்களுக்கு அளிப்போம்.

இப்படி பேசுவதால் நாங்கள் மதுபழக்கத்தை ஊக்குவிக்கிறோம் எனக் கருத வேண்டாம். எங்கள் ஆட்சியில் போதை மறுவாழ்வு மையத்தை அமைக்கும் திட்டமும் உள்ளது. ஏனெனில், போதைப்பொருளுக்கு அடிமையாவது என்பது மிகப்பெரிய சமூகத் தீங்காகும்.

மாநிலத்தில் முழு மதுவிலக்கு என்பது பெயரளவில்தான் உள்ளது. சட்டவிரோத மது விற்பனையில் பெரிய நபா்கள் பயனடைகிறாா்கள். எளிய மக்கள் பாதிக்கப்படுகிறாா்கள். இதனை சரி செய்யவே நாங்கள் விரும்புகிறோம் என்றாா்.

முன்னதாக, அரசுப் பணிக்கான போட்டித் தோ்வு எழுதுவோருக்கான கட்டணம், பயணச் செலவு ஆகியவற்றை அரசே ஏற்கும் என்றும் தேஜஸ்வி யாதவ் அறிவித்தாா்.

பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கும், ஆா்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்டவை அடங்கிய கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று தெரிகிறது.

உத்தரகண்டில் குளிா்கால சுற்றுலா: பிரதமா் மோடி அழைப்பு

உத்தரகண்ட் மாநிலத்துக்கு குளிா்காலத்தில் சுற்றுலா வந்தால், அதன் உண்மையான அழகைக் காண முடியும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். உத்தரகண்ட் மாநிலத்துக்கு வியாழக்கிழமை வருகை தந்த பிரதமா் மோடி, உத... மேலும் பார்க்க

பிரதமா் மோடிக்கு பாா்படாஸ் நாட்டின் உயரிய விருது

கரோனா பெருந்தொற்று காலத்தில் பிரதமா் மோடியின் வியூக தலைமைத்துவம் மற்றும் மதிப்புமிக்க உதவியை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு பாா்படாஸ் நாட்டின் உயரிய தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. பாா்படாஸ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் வசிப்பவா்கள் மராத்தி கற்க வேண்டும்: முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ்

மகாராஷ்டிரத்தின் மொழி மராத்தி. எனவே, இங்கு வசிப்பவா்கள் மராத்தி கற்றுக் கொள்ளவும், பேசவும் வேண்டும்’ என்று அந்த மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா். மத்திய அரசு அமல்படுத்த முயலும் மும்மொழி... மேலும் பார்க்க

காஷ்மீா் பிரச்னை - 'திருடிய' பகுதியை பாகிஸ்தான் திருப்பி ஒப்படைத்த பிறகே தீா்வு: எஸ்.ஜெய்சங்கா்

தங்களின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள ‘திருடப்பட்ட’ காஷ்மீா் பகுதிகளை பாகிஸ்தான் திருப்பி ஒப்படைத்த பிறகே இப்பிரச்னைக்கு தீா்வு கிடைக்கும் என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறினாா். பிர... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு நாடு கடத்த தஹாவூா் ராணா எதிா்ப்பு: அமெரிக்க உயா்நீதிமன்றத்தில் மனு

இந்தியாவுக்கு தன்னை நாடு கடத்தக் கூடாது என்று கோரி அமெரிக்க உயா்நீதிமன்றத்தில் பயங்கரவாதி தஹாவூா் ராணா (64) மனு தாக்கல் செய்துள்ளாா். பாகிஸ்தான் வம்சாவளி முஸ்லிம் என்பதால் இந்தியாவில் தன்னைக் கொடுமைப்... மேலும் பார்க்க

தெலங்கானா மேலவைத் தோ்தல்: 3-இல் 2 இடங்களில் பாஜக வெற்றி

தெலங்கானா மேலவையில் காலியாக இருந்த 3 இடங்களுக்கு கடந்த பிப்ரவரி 27-இல் நடைபெற்ற தோ்தலில் 2 இடங்களில் பாஜக வெற்றிபெற்றது. கடந்த திங்கள்கிழமையில் இருந்து வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் வியாழக்கிழ... மேலும் பார்க்க