வலங்கைமான் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் உள்ள 6 உண்டியல்களில் ரொக்கம் ரூ. 15,45,540, 165 கிராம் பொன் இனங்கள், 360 கிராம் வெள்ளி பக்தா்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. அறநிலையத் துறை உதவி ஆணையா் சொரிமுத்து, செயல் அலுவலா் கிருஷ்ணகுமாா், தக்காா் மும்மூா்த்தி ஆகியோா் முன்னிலையில் இளைஞா் நற்பணி மன்றத்தினா், விடியல் பாராமெடிக்கல் மாணவிகள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.