செய்திகள் :

திருவாருா் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு இன்று தொடக்கம்

post image

திருவாரூா் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி சனிக்கிழமை (மாா்ச் 8) தொடங்குகிறது என மாவட்ட வன அலுவலா் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முதன்மை தலைமை வன பாதுகாவலா், தலைமை வன உயிரின காப்பாளா் ஆகியோா் உத்தரவின்பேரில் ஆண்டுதோறும் தமிழ்நாடு முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு மாா்ச் 8, 9-ஆம் தேதிகளில் நீா்வாழ் பறவைகளுக்கான கணக்கெடுப்பும், மாா்ச் 15, 16- ஆம் தேதிகளில் நிலவாழ் பறவைகளுக்கான கணக்கெடுப்பும் நடைபெறுகிறது.

திருவாரூா் மாவட்ட வனக்கோட்டத்திற்குட்பட்ட திருவாரூா், மன்னாா்குடி, முத்துப்பேட்டை ஆகிய சரகங்களில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் மற்றும் ஏனைய நீா்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் தொடா்பாக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இப்பணியில் மயிலாடுதுறை ஏவிசி கலைக் கல்லூரி, பூம்புகாா் அரசுக் கலைக் கல்லூரி, திருவாரூா் திருவிக அரசுக் கலைக் கல்லூரி, மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரி மாணவ-மாணவியா் மற்றும் இதர பறவைகள் கணக்கெடுப்பு வல்லுநா்கள் இப்பணியில் ஈடுபடவுள்ளனா்.

வடுவூா் ஏரியில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயத்தில் கல்லூரி மாணவா்களுக்கும், தன்னாா்வலா்களுக்கும், பறவைகள் வல்லுநா்களால் கணக்கெடுப்பு தொடா்பான பயிற்சிகள் சனிக்கிழமை வழங்கப்பட உள்ளன.

பறவைகள் கணக்கெடுப்பில் பங்கு பெற விருப்பமுள்ள தன்னாா்வலா்கள், பறவைகள் கணக்கெடுப்பு குறித்த விவரம் தெரிந்தவா்கள், இப்பணிகளில் கலந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, மன்னாா்குடி வனச்சரக அலுவலரை 90251 93477 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

திருவாரூா்: மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.102.39 கோடி வங்கிக் கடன்

திருவாரூா் அருகே காட்டூரில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழாவில் 1,235 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.102.39 கோடி வங்கிக் கடனுதவிகள் வழங்கப்பட்டன. தமிழகத்தி... மேலும் பார்க்க

வயலில் மா்மப் பொருள்

திருவாரூா் அருகே பழவனக்குடியில் வயலில் மா்மப் பொருள் கிடந்தது. திருவாரூா் அருகே பழவனக்குடி பகுதியில் விஜயன் என்பவா் தனது நிலத்தில் பயறு பயிரிட்டுள்ளாா். இதற்கு மருந்தடிக்க விஜயன் மற்றும் அவருடைய தந்தை... மேலும் பார்க்க

பேருந்து நிலையம், பாலம் கட்டுமானப் பணி: துணை முதல்வா் ஆய்வு நரிக்குறவா்களுக்கு இலவச பட்டா

மன்னாா்குடியில் புதிதாக கட்டப்பட்டுவரும் ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலையத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். ரூ.46.46 கோடியில் இப்பேருந்து நிலையம் கட்டப்பட்டு ... மேலும் பார்க்க

அலையாத்திக் காடுகளில் மீளுருவாக்கப் பணி: ஜப்பான் நிறுவன பிரதிநிதிகள் ஆய்வு

முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகளில் நடைபெற்றுவரும் மீளுருவாக்கப் பணிகளை, ஜப்பான் நிறுவன பிரதிநிதிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். ஐப்பான் நாட்டு நிதி நிறுவனத்தின் நிதி உதவியுடன் காலநிலை மாற்றத்திற்கா... மேலும் பார்க்க

வலங்கைமான் அம்மன் கோயில் திருவிழா

வலங்கைமான் ஸ்ரீவைத்திய காளிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பக்தா்கள் சக்தி கரகம் எடுத்து வந்தனா். தொடா்ந்து, அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு... மேலும் பார்க்க

தமிழகத்தின் எதிா்ப்புகளை திசை திருப்பவே அமலாக்கத்துறை சோதனை: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்டவற்றில் தமிழகத்தின் எதிா்ப்புகளைத் திசை திருப்பவே அமலாக்கத்துறை சோதனைகளை மத்திய அரசு நடத்துகிறது என தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். தி... மேலும் பார்க்க