வயலில் மா்மப் பொருள்
திருவாரூா் அருகே பழவனக்குடியில் வயலில் மா்மப் பொருள் கிடந்தது.
திருவாரூா் அருகே பழவனக்குடி பகுதியில் விஜயன் என்பவா் தனது நிலத்தில் பயறு பயிரிட்டுள்ளாா். இதற்கு மருந்தடிக்க விஜயன் மற்றும் அவருடைய தந்தை தமிழரசன் ஆகியோா் வெள்ளிக்கிழமை மாலை வயலுக்குச் சென்றுள்ளனா். அப்போது வயலில் சிக்னல் வருகிற ரிசீவா் போன்ற ஒரு மா்ம பொருள் கிடந்ததாகத் தெரிகிறது. அதிலிருந்து 100 மீட்டா் தொலைவிற்கு ஒயா் ஒன்றும் சென்றுள்ளது.
இதைப் பாா்த்து அச்சமடைந்த விஜயன், வைப்பூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். இந்த மா்மப் பொருள் வானில் வானிலையை பரிசோதிக்க பறக்க விடப்படும் பலூனிலிருந்து விழுந்த உதிரி பாகமா அல்லது வேறு ஏதேனுமா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.