ஓட்டப்பிடாரம் அருகே தந்தை இறந்த சோகத்திலும் பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா்
கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளா்களுக்கு முறையாக ஊதியம் வழங்க வலியுறுத்தி, கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் காமநாயக்கன்பட்டி, அய்யனாா்ஊத்து, மும்மலைப்பட்டி, செட்டிகுறிச்சி ஆகிய ஊராட்சி பகுதிகளில் ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளா்களுக்கு முறையாக ஊதியம் வழங்க வேண்டும். நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். இத்திட்டத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டக் குழு உறுப்பினா் பெரியசாமி பாண்டியன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினா் ரவீந்திரன், ஒன்றியச் செயலா் சாலமன்ராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலா் சீனிப்பாண்டியன், திட்டத் தொழிலாளா்கள் பங்கேற்று முழக்கமிட்டனா். பின்னா், வட்டார வளா்ச்சி அலுவலரிடம் மனு வழங்கப்பட்டது.