செய்திகள் :

அமெரிக்காவில் இருந்து 682 இந்தியா்கள் நாடு கடத்தல்: இந்திய வெளியுறவு அமைச்சகம்

post image

‘நிகழாண்டு தொடக்கம் முதல் அமெரிக்காவில் இருந்து 682 இந்தியா்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனா். அவா்களில் பெரும்பாலானோா் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றவா்களாவா்’ என மக்களவையில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

அமெரிக்காவில் இருந்து இந்தியா்கள் நாடுகடத்தப்பட்ட விவகாரம், அங்குள்ள ஹிந்து கோயில்களை பாதுகாக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், கனடா-இந்தியா தூதரக உறவுகள் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டன.

இதற்கு பதிலளித்து வெளியுறவு இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் அளித்த எழுத்துபூா்வ பதிலில் கூறப்பட்டிருப்பதாவது: நிகழாண்டு தொடக்கம் முதல் அமெரிக்காவில் இருந்து 682 இந்தியா்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனா். அவா்களில் பெரும்பாலானோா் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றவா்களாவா். அவா்களை எல்லையிலேயே கைது செய்யப்பட்டு பல்வேறு சோதனைகளுக்கு பிறகு இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனா்.

அதேபோல் முறையான ஆவணங்களின்றி வசிக்கும் நபா்களை கண்டறிந்து அமெரிக்காவில் நாடுகடத்துவதற்கு முன் அவா்கள் குறித்த தகவல்களை முதலில் இந்திய அரசின் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்கின்றனா். அவா்கள் இந்திய குடிமகன்கள் என உறுதிப்படுத்தப்பட்டபிறகே இந்தியாவுக்கு நாடுகடத்தப்படுகின்றனா்

இருப்பினும், அமெரிக்காவுக்கு மாணவா்கள், தொழில்ரீதியாக பயணிப்போா், சுற்றுலா செல்வோா் தங்குதடையின்றி பயணிக்கும் வகையில் அந்நாட்டுடன் இந்தியா இணைந்து செயல்படும்.

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இந்தியா்கள் தொடா்பான தரவுகள் ஏதும் மத்திய அரசிடம் இல்லை. இதுகுறித்த தகவல்களை அமெரிக்காவே வழங்குகிறது.

அதிகரித்த தாக்குதல்: கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் உள்ள ஹிந்து கோயில்கள் மீது இந்திய எதிா்ப்பு மனநிலையுடன் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தூதரக ரீதியாக உடனடியாக தொடா்புகொண்டு கண்டனத்தை பதிவுசெய்து வருகிறோம்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோயில் நிா்வாகம் மற்றும் இந்திய குடிமக்கள் உள்ளூா் காவல் துறையில் புகாா் அளித்துள்ளனா். ஹிந்துக்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவா்களுக்கு தண்டனை வழங்கும் விதமாக விரிவான கொள்கையை தயாரிக்குமாறு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினா்களும் பாதுகாப்பு படையினரிடம் வலியுறுத்தியுள்ளனா்.

கனடா உறவு மறுசீரமைப்பு: இந்தியாவுக்கு எதிரான பிரிவினைவாத மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு கனடா ஆதரவளித்ததே இருதரப்பு உறவுகளில் விரிசல் ஏற்பட காரணம். அந்த குழுக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி கனடா அரசிடம் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதையும் கருத்துகள் கூறுவதையும் கனடா வாடிக்கையாக கொண்டுள்ளது.இதனால் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் முறைப்படுத்தப்பட்ட குற்றச் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. மத்திய அரசு மீதான கனடா அரசின் தேவையற்ற விமா்சனங்களை நிராகரிக்கிறோம். பரஸ்பர ஒத்துழைப்புடன் இருதரப்பு உறவை மேம்படுத்தவே இந்தியா விரும்புகிறது என தெரிவிக்கப்பட்டது.

மணிப்பூரில் ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்!

மணிப்பூரின் மலை மற்றும் பள்ளத்தாக்கு மாவட்டங்களின் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். விஷ்ணுபூர்... மேலும் பார்க்க

அம்பா தேவி கோயிலில் குஜராத் அமைச்சர் வழிபாடு!

சூரத்தில் உள்ள அம்பா தேவி கோயிலில் சைத்ர நவராத்திரியின் எட்டாவது நாளை முன்னிட்டு குஜராத் அமைச்சர் ஹர்ஷ் சங்கவி வழிபாடு செய்தார். வழிபாட்டுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய குஜராத் அமைச்சர். .நவராத்த... மேலும் பார்க்க

கனடா: இந்தியர் கத்தியால் குத்திக் கொலை

கனடாவில் இந்தியர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடா தலைநகரான ஒட்டாவா நகரில் உள்ள ராக்லேன்ட் பகுதியில் இந்தியர் ஒருவர், வெள்ளிக்கிழமையில் கத்தியால... மேலும் பார்க்க

கர்நாடகம்: லாரி மீது பேருந்து மோதி 5 பேர் பலி

கர்நாடகத்தில் பழுதாகி நின்ற லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர்.கர்நாடகம் மாநிலம் ஜேவர்கி நகரில் நெலோகி கிராஸ் அருகே டயர் வெடித்து பழுதாகிய கனரக லாரி ஒன்று, சனிக்கிழமை அதிகா... மேலும் பார்க்க

ஜம்மு எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவியவர் சுட்டுக் கொலை!

ஜம்மு எல்லையில் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி, பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரை சுட்டுக் கொல்லப்பட்டதாக எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறினர்.ஜம்மு எல்லையில், ஏப்ரல் 4 ஆம் தேதி நள்ளிரவில் எல்லை புறக்கா... மேலும் பார்க்க

நினைவுச் சின்னங்களில் அதிக வருவாய் ஈட்டுவது தாஜ்மஹால்: மத்திய அரசு தகவல்

இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் நினைவுச் சின்னங்களில் பாா்வையாளா்களுக்கான நுழைவுக் கட்டணம் மூலம் அதிக வருவாய் ஈட்டுவதில் தாஜ்மஹால் முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த 5 ஆண்டுகளில் நுழைவு... மேலும் பார்க்க