அமெரிக்காவில் பிரபலமாகும் `வாடகை கோழி சேவை' - என்ன காரணம் தெரியுமா?
அமெரிக்காவில் கோழிகளை வாடகைக்கு எடுத்து வளர்ப்பது என்பது பிரபலமாகி வருகிறது. ஏன் மக்கள் கோழிகளை வாடகைக்கு எடுத்து வளர்க்கிறார்கள். அதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன என்று இங்கு தெரிந்துகொள்ளலாம்.
முட்டைகளின் விலை அளவுக்கு அதிகமாகி வருவதைத் தடுப்பதற்காக சில அமெரிக்க நிறுவனங்கள் மக்கள் தங்களது வீடுகளில் கோழிகளை வளர்க்க வலியுறுத்துகிறது.
பிப்ரவரி 2022 ஆண்டு கோழிப் பண்ணைகளில் தொற்றுநோய் பரவல் ஏற்பட்டது. இதனையடுத்து 166 பில்லியன் அதிகமான கோழிகள் அழிக்கப்பட்டன.

அப்போது முட்டையின் விலை சராசரியாக 1.93 டாலராக இருந்தது. ஆனால் ஜனவரி 2023 இல் அது இரு மடங்குகளாக அதிகரித்து 4.82 டாலராக உயர்ந்துள்ளது.
தற்போது சிகாகோ, நியூயார்க் மற்றும் சான் பிரான்சி கோ போன்ற நாட்டின் சில பகுதிகளில் முட்டைகளின் சில்லறை விலை $4.95 முதல் $10 வரையிலும் அல்லது அதற்கு மேலும் உள்ளது.
இதனைத் தடுக்க அமெரிக்கா வேளாண் துறை சில யுத்திகளை வழங்கியது. இதன்படி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடாக நிவாரண நிதியும், தடுப்பூசி ஆராய்ச்சிக்காக சில நிதியையும் ஒதுக்கியது.
இருப்பினும் முட்டையின் விலை 41% அதிகமாக இருந்தது. அதன் நிலை மாற இன்னும் மூன்று நாள்கள் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த நெருக்கடியை தடுக்க சில நிறுவனங்கள் கோழிகளை வாடகைக்குவிட முடிவு செய்தது.

கோழிகளைப் பராமரிப்பதற்கான புத்தகம், அதற்கான பயிற்சி, தீவனம் போன்றவை குறித்துத் தொலைபேசித் தகவல்களும் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. ஒரு ஆரோக்கியமான கோழி வாரத்திற்கு ஐந்து முட்டை வரை இடும் இதனால் இந்த நெருக்கடி குறையும் என்று மக்கள் நம்புகின்றனர்.
இது குறித்து மக்கள் கூறுகையில், இது ஒரு நீண்ட கால பராமரிப்பு இல்லை என்றும் குறுகிய காலத்தில், இதுபோன்ற சேவைகளை தங்களால் அணுக முடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். கோழி வளர்ப்பு என்பது குறைந்த பராமரிப்பு என்பதாலும் மக்கள் இதனை விரும்பி செய்வதாகவும் கூறுகின்றனர்.